பெண்ணுடன் டேட்டிங் ஆசையால் தொழிலதிபர் ஒருவர் 60 லட்சம் ரூபாய் ஏமாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. 

பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். டேட்டிங் செய்வதற்காக செயல்பட்டு வரும் சில இணையதளங்களில் தன்னுடைய பெயரை பதிவு செய்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி சோம்பா 76 என்ற முகவரியில் ஒரு பெண், தொழிலதிபரை தொடர்பு கொண்டுள்ளார்.

தன் பெயர் அர்பிதா என்றும், கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்றும் அன்த பெண் அறிமுகம் செய்து கொண்டுள்ளார். பேஸ்புக், செல்போன் எண்களைப் பரிமாறிக் கொண்ட அவர்கள், வாட்ஸ் அப், பேஸ்புக் முகவரியை அளித்தும் புகைப்படங்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டுள்ளனர்.

இருவருக்கும் இடையிலான நட்பு சில மாதங்கள் தொடர்ந்த நிலையில், திடீரென தொழிலதிபருக்கு போன் செய்த அர்பிதா, அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லை என்றும், உடனடியாக 30 ஆயிரம் ரூபாய் அளித்து உதவ முடியுமா என்று கேட்டுள்ளார். மனம் இளகிய தொழிலதிபரோ ரூ.30 ஆயிரம் ரூபாயை அர்பிதா கூறிய வங்கி கணக்குக்கு பரிமாற்றம் செய்துள்ளார். இதேபோல பல லட்சங்களை, அர்பிதாவுக்கு தொழிலதிபர் கொடுத்துள்ளார். இதுவரை பல லட்ச ரூபாயை அர்பிதாவுக்கு கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், தொழிலதிபருடன் பேசுவதை அர்பிதா குறைத்துக் கொண்டுள்ளார். திடீரென அர்பிதாவின் செல்போன், வாட்ஸ்அப் என அனைத்தும் முடக்கப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த தொழிலதிபர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதையடுத்து, பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். பெண்ணுடன் டேட்டிங் சபலாத்தால் பல லட்சங்களை தொழிலதிபர் இழந்துள்ளார்.