Asianet News TamilAsianet News Tamil

Diabetics: சர்க்கரை நோயால் ஏற்படும் பக்க விளைவுகள்! எச்சரிக்கும் ஆராய்ச்சி முடிவுகள்!

இனிப்பு வகைகளை சாப்பிடுவதால் மட்டும் இந்நோய் வருவதில்லை. கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதும் சர்க்கரை நோய் ஏற்பட முக்கிய காரணமாகும்.

Side effects of diabetes! Study results warn!
Author
First Published Jan 6, 2023, 11:04 AM IST

இன்று நம்மில் பலரும் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோய். இது எதனால் ஏற்படுகிறது என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லாததே, இந்த நோய் அதிகரித்துக் கொண்டிருப்பதன் முக்கிய காரணமாகும். இனிப்பு வகைகளை சாப்பிடுவதால் மட்டும் இந்நோய் வருவதில்லை. கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதும் சர்க்கரை நோய் ஏற்பட முக்கிய காரணமாகும்.

பரம்பரை நோய்

சர்க்கரை நோய் அதிகரிக்கும் சமயத்தில், பல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது, நூற்றுக்கு தொன்னூறு சதவீத நபர்களுக்கு சக்கரை நோய் பாதிப்பு இருக்கிறது. மேலும் இந்நோய் ஒரு பரம்பர நோயாகயும் பார்க்கப்படுகிறது. காரணம் இந்த நோய் வீட்டில் யாரேனும் ஒருவருக்கு இருந்தால் கூட, அந்த குடுபம்பத்தில் இருக்கும் அனைத்து நபர்களுக்கும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

சக்கரை நோயானது அதிக பருமன், முறையற்ற வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் போன்ற பல காரணங்களால் ஏற்படுகிறது. இந்த நோய் உள்ளவர்கள் தினந்தோறும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். இதனால் பின்னாளில் பல பக்கவிளைவுகள் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வகையில் சக்கரை நோயால், பற்களுக்கு உண்டாகும் பிரச்சனைகள் குறித்து இப்போது பார்ப்போம்.

சக்கரை நோயால் உண்டாகும் புதிய நோய்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினந்தோறும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், இரத்தில் இருக்கும் சக்கரையின் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. இவ்வாறு தொடர்ந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால், பின்னாளில் பற்கள் வலுவற்று போகும் அபாயம் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Kidney Stone: சிறுநீரக கல் பிரச்சனையா? எந்த உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டும்!

மேலும், பற்களை சுற்றி இருக்கும் முரசு கரைந்து, பற்கள் உதிர்வு ஏற்படுமாம். இதனால் சக்கரை நோய் உள்ளர்கள் முடிந்தளவு மாத்திரைகளை குறைத்து விட்டு, ஆரோக்கிய உணவுகளின் மூலம் மருத்துவத்தை மேற்கொள்வது தான் மிகவும் சிறந்தது. அப்போது தான் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது.

இதனைத் தொடர்ந்து, இரத்தில் உள்ள சக்கரையின் அளவு குறையும் நேரத்தில், பற்களில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆரோக்கிய உணவுகளின் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுபடுத்தினால் பக்கவிளைவுகள் குறைவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

முக்கிய குறிப்பு

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பற்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு மருத்துவரை கலந்து ஆலோசிப்பது சிறந்தது. 

Follow Us:
Download App:
  • android
  • ios