Kidney Stone: சிறுநீரக கல் பிரச்சனையா? எந்த உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டும்!
சிறுநீரக கல் எப்படி மற்றும் எதனால் ஏற்படுகிறது என்பதையும், அதனைத் தடுக்கும் முறைகள் பற்றியும், தவிர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்தும் காண்போம்.
இன்றைய நவீன உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் பார்க்காமல், அனைவரும் பலவகை நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வகையில் சிறுநீரகக் கல் பிரச்சனையும் அனைவருக்கும் ஏற்படும் முக்கிய பாதிப்பாக உள்ளது. இதற்கு பல காரணங்கள் இருந்த போதிலும், முதல் முக்கிய காரணமாக இருப்பது நமது உணவுமுறை தான். ஏனெனில், இப்போதைய நிலையில் நாம் சாப்பிடும் உணவுகள் ஆரோக்கியமானதாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஆரோக்கிய உணவு முறைக்கு பிற வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இப்போதே விழித்துக் கொள்வது தான் நல்லது. பிரச்சனை பெரிதான பிறகு, கவலைப்பட்டு எந்தப் பயனும் இல்லை. இப்போது சிறுநீரக கல் எப்படி மற்றும் எதனால் ஏற்படுகிறது என்பதையும், அதனைத் தடுக்கும் முறைகள் பற்றியும், தவிர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்தும் காண்போம்.
சிறுநீரகக் கல்
சிறுநீரில் அதிகளவில் யூரிக் அமிலம் இருந்தாலோ அல்லது சிறுநீரகக் கல் உருவாவதைத் தடுக்கின்ற முக்கிய காரணிகளான சிட்ரேட் போன்றவை குறைவாக இருப்பதாலும் சிறுநீரகக் கல் உருவாகிறது.
ஒரு சில நபர்களுக்கு அதிகளவில் கால்சியம் இருப்பது மரபு வழியாக ஏற்படும். அது போல, முறையற்ற உணவுப் பழக்கம் மற்றும் தண்ணீர் குறைவாக குடிப்பதாலும் சிறுநீரகக் கல் பாதிப்பு ஏற்படுகிறது
நோய் வராமல் தடுக்க
புடலங்காய், வாழைத்தண்டு, சுரைக்காய், பரங்கி மற்றும் வெள்ளரிக்காய் போன்ற அதிகளவு நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்கள் வாழைத்தண்டு சாற்றை அடிக்கடி குடிப்பதால இந்நோய் வராமல் தடுக்கலாம். மேலும், சிறுநீரகக் கல் வந்து விட்ட பிறகு, வாழைத்தண்டு சாற்றை குடித்து வந்தால், அதனை மிக எளிதில் கரைத்து விட முடியும்.
அதிகளவு திரவ உணவுகளை உண்பதால், சிறுநீரக கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வெளியேறி விடும்.
அதிகமாக இளநீர் மற்றும் தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க "நுங்கு பாயசம்" சூப்பராக இருக்கும்
தவிர்க்க வேண்டியவை
அதிகளவு மசாலா உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
நண்டு, இறால், மீன், முட்டை வெள்ளைக் கரு மற்றும் பால் போன்ற உணவுகளை தவிர்த்து விட வேண்டும்.
தேநீர், ஐஸ்கிரீம், சாக்லெட், கோப்பி மற்றும் குளிர்ப்பானங்கள் ஆகியவற்றை குறைத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்