Asianet News TamilAsianet News Tamil

சாப்பிட்டவுடன் கழிவறைக்கு போகும் நிலை ஏற்படுகிறதா? எச்சரிக்கையுடன் இருங்கள்..!!

செரிமான நேரம் நபருக்கு நபர் மாறுபடும். பாலினம் மற்றும் உடல்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் உணவு செரிமானம் அடைகிறது. பொதுவாக உணவு மலமாக உடல் வழியாக செல்ல 3-4 நாட்கள் ஆகும். ஆனால் சிலருக்கு சாப்பிட்டவுடன் கழிவறைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.
 

know what the gastrocolic reflex is and what it does to your body before you poop right after eating
Author
First Published Jan 19, 2023, 10:46 AM IST

சிலர் எதையாவது சாப்பிட்ட உடனேயே கழிப்பறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். இல்லையெனில் வயிற்றுவலி மற்றும் வாயு பிரச்சனை தோன்றும். இதற்கு என்ன காரணம்? சாப்பிட்டவுடன் மலம் கழிக்க வேண்டும் என்று எதனால் தோன்றுகிறது?. செரிமான நேரம் நபருக்கு நபர் மாறுபடுகிறது. ஒரு நபரின் உயரம், எடை, பாலினம் மற்றும் உடல்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் உணவு செரிக்கப்படுகிறது. பொதுவாக உணவு மலமாக உடல் வழியாக செல்ல 3-4 நாட்கள் ஆகும். இருப்பினும், செரிமானம் என்பது ஒரு படிப்படியான செயல்முறை ஆகும். சாப்பிட்டவுடன் உடனடியாக டாய்லெட் செல்ல வேண்டும் என்று நினைத்தால், காஸ்ட்ரோகோலிக் ரிஃப்ளெக்ஸ் இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

காஸ்ட்ரோகோலிக் ரிஃப்ளெக்ஸ் என்பது உடலின் எதிர்வினை செயல்பாடாகும். இதில் சாப்பிடும் எளிய செயல் இரைப்பைக் குழாயில் இயக்கத்தைத் தூண்டுகிறது. இந்த வினைத்திறன் குறைந்த பட்சம், கோலிசிஸ்டோகினின் அல்லது சிசிகே மற்றும் மோட்டிலின் ஹார்மோன்களின் அசாதாரண அளவுகளின் விளைவாக தோன்றுகிறது, அவை செரிமான அமைப்பின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கு பொறுப்பாகும்.உணவு வயிற்றில் நுழையும் போது, ​​​​உடல் ஹார்மோனை வெளியிடுகிறது. இது பெருங்குடலை அழுத்துகிறது. இந்த சுருக்கங்கள் செரிமான அமைப்பு மூலம் முன்பு உட்கொண்ட உணவை மேலும் நகர்த்துகின்றன, இது மலத்தை வெளியேற்றும் தூண்டுதலுக்கு வழிவகுக்கிறது. 

உடலுறவுக்கு பிறகு தலைவலி வருகிறதா? எச்சரிக்கையாக இருங்கள்..!!

சிலருக்கு, காஸ்ட்ரோகோலிக் ரிஃப்ளெக்ஸ் லேசானது. இதற்கு எந்த அறிகுறியும் கிடையாது. ஆனால் சிலர் சாப்பிட்ட பிறகு மலம் கழிப்பதற்கான தூண்டுதல் ஏற்பட்டால், அது தீவிரமான நோய் பாதிப்பாகும். சில உணவுகள் இந்த பாதிப்புக்கு வலுவான தூண்டுதலை ஏற்படுத்தும். முழு தானியங்கள் மற்றும் சில காய்கறிகள், வறுத்த உணவுகள் மற்றும் பால் பொருட்கள் போன்ற நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளும் இதில் அடங்கும். மன அழுத்தம் மற்றும் பதட்டம், வயிற்று வலி, வீக்கம், வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் ஆகியவை இதனுடைய அறிகுறிகளாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 

காஸ்ட்ரோகோலிக் ரிஃப்ளெக்ஸின் அறிகுறிகளைக் குறைக்க ஆரோக்கியமற்ற கொழுப்பு வகைகளைக் கொண்ட உணவுகளைத் தவிர்க்கவும். எப்பொழுதும் சாப்பிடுவதற்கு முன் சிறிது மிளகுக்கீரை டீயை குடிக்கவும் அல்லது மிளகுக்கீரை எண்ணெய் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ளவும், ஏனெனில்
இதில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் விளைவு இடம்பெற்றுள்ளது. உங்கள் காஸ்ட்ரோகோலிக் ரிஃப்ளெக்ஸை வலுப்படுத்தவும், காலையில் குடல் இயக்கத்தைத் தொடங்கவும் உதவும் ஆரோக்கியமான கொழுப்புகளைக் கொண்ட காலை உணவை சாப்பிடுங்கள். இதன்மூலம் பாதிப்புகள் படிப்படியாக குறையத் துவங்கும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios