Aloevera Juice: தினசரி கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
தீக்காயங்கள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சையளிக்க கற்றாழை ஜெல் பயன்படுத்தப்படுகிறது. மேலும், கற்றாழை ஜூஸ் வடிவிலும் பருகலாம்.
மருத்துவ குணங்கள் மற்றும் ஊட்டச்சத்து பயன்பாடுகளை கொண்ட ஒரு தாவர இனம் கற்றாழை. மருத்துவ தாவரமாக பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் கற்றாழை சருமம், முடி, உடல் மற்றும் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அள்ளித் தருகிறது. மருந்து, உணவு மற்றும் அழகு சாதனத் தொழிலுக்கு மிக முக்கிய மூலப்பொருளாக கற்றாழை விளங்குகிறது. தீக்காயங்கள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சையளிக்க கற்றாழை ஜெல் பயன்படுத்தப்படுகிறது. மேலும், கற்றாழை ஜூஸ் வடிவிலும் பருகலாம்.
கற்றாழை ஜூஸ்
கற்றாழை ஜெல்லில் தண்ணீர் கலந்து தயாரிக்கப்படுவது தான் கற்றாழை ஜூஸ். சில சமயங்களில் இதில், சுவையைக் கூட்டுவதற்காக பழச்சாறு அல்லது சர்க்கரை சேர்க்கப்படுகிறது. கற்றாழை ஜெல் மலச்சிக்கல் போன்ற செரிமானப் பிரச்சினைகளை சரி செய்கிறது. இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது. கற்றாழை பல வகைகளில் பயன்படுத்தப்பட்டாலும், கற்றாழை ஜூஸ் குடிப்பது தான் அது வழங்கும் பலன்களை முழுமையாக பெற சிறந்த வழி என்கிறார், ஆயுர்வேத சுகாதார நிபுணர் டாக்டர் அசுதோஷ் கெளதம். வளர்சிதை மாற்றத்தை சீராக்கும் மற்றும் மலச்சிக்கல், நீரிழப்பு போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவும் என்சைம்கள் கற்றாழையில் அதிகளவில் நிறைந்துள்ளன. மேலும், குடல் ஆரோக்கியத்திற்கு கற்றாழை ஜூஸ் தான் சிறந்தது என ஊட்டச்சத்து நிபுணர்கள் அங்கீகரித்துள்ளனர்.
நாவூறும் நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு இப்படி செய்து பாருங்க சூப்பரா இருக்கும்.
ப்ரீபயாடிக்காக பயன்படும் கற்றாழை ஜூஸ்
ப்ரீபயாடிக்குகளின் மிகச் சிறந்த இயற்கை ஆதாரமாகவும், லாக்டிக் அமில பாக்டீரியா நொதித்தலுக்கு மிக முக்கிய மூலக்கூறாகவும் கற்றாழை உள்ளது. கற்றாழையில் குளுக்கோமன்னன், அசிமனேன், மன்னோஸ் பாலிமர்ஸ் (அசெமன்னோஸ்), வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, பி6 மற்றும் வைட்டமின் சி உள்பட பல சத்துக்கள் நிரம்பியுள்ளது. இவை நம் குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாவை பராமரிக்க ஒரு ப்ரீபயாடிக்காக செயல்படுகிறது.
மலசிக்கல் பிரச்சனைக்கு கற்றாழை
மலசிக்கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு கற்றாழை சிறந்த நன்மைகளை அளிக்கிறது. ஏனெனில், கற்றாழையில் அலோயின் (aloin) இருக்கிறது. இது அதன் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மட்டுமின்றி, மலமிளக்கும் பண்பையும் கொண்டுள்ளது. மேலும், அலோயின் பெருங்குடலில் இருக்கும் சுருக்கங்களைத் தூண்டி மலத்தை மென்மையாக்கி மலச்சிக்கலை அறவே தீர்க்கிறது.
குடல் அழற்சியை சரி செய்கிறது
கற்றாழையில் அடங்கியுள்ளள அழற்சி எதிர்ப்பு பண்புகள், இரைப்பை குடல் அழற்சியை குறைக்க உதவுகிறது. இதுதவிர வலி மற்றும் எரிச்சல் நிவாரணியாகவும் கற்றாழை விளங்குகிறது. குடல் தொடர்பான பிரச்னைகளுக்கு நீங்கள் கற்றாழை ஜூஸ் குடிக்கலாம் என்றாலும், எப்போதும் ஊட்டச்சத்து நிபுணரை கலந்தாலோசித்த பின்னரே முயற்சிக்க வேண்டும்.