உங்கள் கால்களில் ஏற்படும் மாற்றங்களை வைத்து உடலில் என்னென்ன பிரச்சனைகள் என்பதை அறியலாம். இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நாம் நிற்பதற்கு, நடப்பதற்கு, உடலை சமநிலையாக வைப்பத்திற்கு கால்கள் தான் நமக்கு உதவுகிறது. நம் உடலின் மிக முக்கியமான பகுதியாக இது கருதப்படுகிறது. கால்கள் உடலின் உள்பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால், கால்களில் ஏற்படும் சில மாற்றங்களை வைத்து, பல நோய்களின் அறிகுறிகளை கண்டறியலாம்.
அதாவது கால் வலி முதல் மரத்துப்போதல் வரை இதில் அடங்கும். கால்களில் தோன்றும் இந்த அறிகுறிகள் தான் நமக்கு என்ன பிரச்சினை என்பதை சுட்டிக்காட்டுகிறது. நம் பெரும்பாலானோர் இந்த அறிகுறிகளை புறக்கணிக்கிறோம். ஆனால் இனி நீங்கள் இப்படி செய்யாதீர்கள். இல்லையெனில் பிரச்சனையாகிடும். சரி இப்போது நம் கால்களில் ஏற்படும் சில மாற்றங்களை வைத்து நமக்கு என்ன பிரச்சனை என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கால்களில் ஏற்படும் மாற்றங்களும்! உடல்நல பிரச்சனைகளும்!
1. காணுக்கால் வலி
ஆர்தரைடிஸ் மற்றும் வைட்டமின் டி வைட்டமின் சி சத்துக்களின் குறைபாட்டு காரணமாக தான் கணுக்கள் வலி ஏற்படுகிறது. மெக்னீசியம் குறைபாடு காரணமாகவும் நரம்பு பலவீனமடைந்து, காலை பிடித்து இழுக்கும் பிரச்சனை ஏற்படும். அதுமட்டுமல்லாமல் கால்களில் சரியான ரத்த ஓட்டம் இல்லை என்றாலும் கணுக்கால் வலிக்கும். கணுக்காலில் அலர்ஜி ஏற்பட்டாலும் இப்படி நடக்கும். எனவே இந்த அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால் உடனே ஊட்டச்சத்து மருத்துவரை அணுகுங்கள்.
2. கால் மரப்பது
சர்க்கரை நோயாளிகள் மற்றும் நரம்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு தான் இது நிகழும். இது தவிர பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி12 போன்ற சத்துக்களின் குறைபாட்டு காரணமாகவும் கால் மரத்துப் போகலாம். தொடர்ந்து நடந்தாலும் இது ஏற்படும்.
3. கால் வீங்குதல்
கால்கள் வீங்குவதற்கு முக்கிய காரணம் கால்களில் நீர் இருப்பது தான். மேலும் ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி12 குறைபாட்டாலும் இது நிகழும். கால் வீக்கம் இருக்கும்போது கால் வலி அதிகமாக ஏற்பட்டாலோ அல்லது சிவத்தாலோ அது ஆபத்தானது. இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது தான் நல்லது. இந்த பிரச்சினையை தவிர்க்க உணவில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். அதிக புரத உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது தவிர கால்களுக்கு பயிற்சி செய்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
4. கால்களில் அதிக வெடிப்பு
இந்த பிரச்சனையானது வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு தான் அதிகமாக ஏற்படும். இருத்தவிர துத்தநாகம், கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் தங்களது உணவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் துத்தநாகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். இந்த சத்துக்கள் கருமம் ஆரோக்கியமாக இருக்க ஊக்குவிக்கும்.
5. குளிர்ந்த பாதம்
பெரும்பாலும் இந்த பிரச்சனை இரும்பு சத்து குறைபாட்டால்தான் ஏற்படுகிறது. ஹைபோதைராய்டிசம் கூட இதற்கு காரணமாகும். மேலும் சரியாக சாப்பிடாமல் இருந்தாலும் இந்த மாதிரி பிரச்சனை ஏற்படும். உடலில் சீரான ரத்த ஓட்டம் நடைபெற்றால் இந்த பிரச்சினையை தடுக்கலாம். இந்த பிரச்சனையின் ஆரம்ப நிலையை கண்டறிந்தால் பெரிய பாதிப்பு நிகழ்வதை தடுக்கலாம். எனவே இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே இருக்கும் போதே உடனே மருத்துவரை அணுகுவது தான் நல்லது.
6. ஸ்பைடர் வெயின்ஸ் (spider veins)
நரம்புகள் பலவீனமாக இருந்தால் இந்த பிரச்சனை ஏற்படுகின்றது. நரம்புகள் பலவீனமானால் சருமம் மற்றும் உடல் நிறம் பாதிக்கப்படும். மேலும் வைட்டமின் சி மற்றும் ஃபிளேவினாய்டுகள் குறைபாட்டாலும் இது நிகழும். அதுபோல உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்கள் ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து இருந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படும். எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் கட்டுக்கோப்பான எடை மூலம் இதை குறைத்து விடலாம்.
