உடலில் சோம்பல் அதிகமானால் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்- போதும்..!!
குளிர்ந்த காலநிலையில், உடலுக்கு நல்லதை சேர்க்கும் மற்றும் செரிமான மண்டலத்துக்கு எளிதான உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். குறிப்பாக நீங்கள் சாப்பிடும் உணவுகளில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது முக்கியம்.
நம்மில் பெரும்பாலானோருக்கு குளிர்காலம் என்றாலே உடலில் சோம்பல் அதிகமாகிவிடும். அதனால் வீட்டு வேலைகளை செய்யவோ அல்லது வெளியில் செல்ல முடியாமல் போகலாம். அதனால் குளிர்ந்த வானிலை நிலவும் போது சாதகமான உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கைச் சூழலை அமைத்துக்கொள்வது மிகவும் நல்லது. மாறிவரும் தட்பவெட்பநிலைக்கு ஏற்றவாறு உணவுகளில் மாற்றம் இருக்கம் வேண்டும். குளிர்காலத்தில், சத்தான, ஜீரணிக்க எளிதான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.
நட்ஸ்
உடலுக்கு நோய் எதிர்ப்பு சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் முக்கியமானது நட்ஸ். பாதாம், வால்நட், பிஸ்தா போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதம் உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகின்றன. இதுதவிரவும் நட்ஸ் உணவுகளில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் மனித உடலுக்கு தேவையான சத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
பேரீச்சைப்பழம்
குளிர்காலத்தில் அனைவரும் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகளில் ஒன்று பேரீச்சம்பழம். இதில் வைட்டமின்கள், குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. இது உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் ஆற்றலை வழங்குகிறது. பேரிச்சம்பழத்தை தனியாக சாப்பிடுவதை விட, பால் மற்றும் தேனில் ஊறவைத்து சாப்பிடுவது மேலும் ஆரோக்கியம் நிறைந்தது.
வீட்டு வைத்திய முறையில் பொடுகினைப் போக்க எளிய 3 டிப்ஸ்..!!
பருவக் கால பழங்கள்
இந்தியாவில் குளிர்ந்த வானிலை நிலவும் போது பல்வேறு பழங்கள் விற்பனைகு கிடைக்கும். அவை சீசனல் பழங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன். குறிப்பிட்ட சீசன்களுக்கு ஏற்றவாறு பழங்களை நாம் சாப்பிடுவது, அந்தந்த தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறான ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. அந்தவகையில் குளிர்காலத்துக்கு ஏற்ற ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, பீச், கொய்யா, திராட்சை பழங்களை சாப்பிடுவது நல்லது.
முட்டை
முட்டை என்பது பெரும்பாலான வீடுகளில் அன்றாடம் சமைக்கப்படும் உணவாகும். பொதுவாக முட்டை செரிமானம் எளிதாக நடக்க வழிவகுக்கும். எனினும், இரவு நேரங்களில் முட்டையில் செய்த உணவுகளை தவிர்த்துவிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். முக்கியமாக வயது முதிர்ந்தோர் மற்றும் குழந்தைகள் இரவு நேரங்களில் முட்டை சாப்பிடக் கூடாது.
சக்கரைவள்ளிக் கிழங்கு
குளிர்காலத்தில் கிடைக்கும் முக்கியமான பருவக்கால உணவுகளில் ஒன்று சக்கரைவள்ளிக் கிழங்கு. இதுவும் உடலுக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய உணவுகளில் ஒன்று. நூறு கிராம் சக்கரைவள்ளிக் கிழங்கில் 109 கிலோகலோரி ஆற்றல் மற்றும் 24 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.