Asianet News TamilAsianet News Tamil

மலச்சிக்கல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் 5 உணவுப் பழக்கங்கள்..!!

மலச்சிக்கல் ஏற்படுவதற்கு பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் காரணமாக உள்ளது. உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையில் செய்யப்படும் சில மாற்றங்கள் மூலம், இந்த பிரச்னையை எளிதில் சரிசெய்துவிடலாம்.
 

Foods that can be eaten to prevent stool thickening and constipation
Author
First Published Jan 4, 2023, 4:12 PM IST

அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் உடல்நலப் பிரச்சனைகள் ஏராளம். அதில் முக்கியமானது செரிமான பிரச்சனைகள். இன்றைய காலத்தில் வாழ்க்கை முறையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செரிமான பிரச்சனைகள் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகும், இதில் அதிகப்படியான மற்றும் மோசமான உணவு, உடற்பயிற்சியின்மை மற்றும் மன அழுத்தம் ஆகியவை அடங்கும். மலச்சிக்கல் என்பது மக்களை குழப்பும் பொதுவான பிரச்சனையாகும். மலச்சிக்கல் பல காரணிகளால் ஏற்படலாம். முன்பு கூறியது போல, செரிமான அமைப்பு பாதிக்கப்படுவதே முக்கிய காரணம். ஆனால் உணவு அல்லது உணவில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம், இதை சரிசெய்துவிடலாம். மலச்சிக்கலைப் போக்க உதவும் சில உணவுகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

சக்கரைவள்ளிக் கிழங்கு

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன்படி சக்கரைவள்ளிக் கிழங்கில் அதிகப்படியான நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. மலச்சிக்கலை போக்க இது மிகவும் உதவியாக இருக்கும். அடிக்கடி இதை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் செரிமானப் பிரச்னை நீங்கி, மலம் கடினமாவதையும் தடுத்துவிடும். 

புரோபயாடிக்குகள்

புரோபயாடிக்குகளின் வகையைச் சேர்ந்த உணவுகளை மலச்சிக்கல் எளிதில் விரட்டி அடித்துவிடும். தயிர், சில பால் பொருட்கள் மற்றும் பிளாக் பக்வீட் போன்றவை புரோபயாடிக்குகள் நிறைந்து உணவுகளாக உள்ளன. மலச்சிக்கலை நிவர்த்தி செய்வதோடு, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இவ்வுணவுகள் பெரிதும் உதவுகின்றன.

Foods that can be eaten to prevent stool thickening and constipation

ஆலிவ் மற்றும் ஆளிவிதை எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்யில் பல ஆரோக்கிய நன்மைகள் காணப்படுகின்றன. ஆளி விதைகளிலும் அதே சத்துக்கள் காணப்படுகின்றன. ஆலிவ் மற்றும் ஆளிவிதை எண்ணெயை ஒன்றாக எடுத்துக் கொண்டால், அது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது. அவை உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன.

தினசரி வெந்நீரில் குளிக்கும் ஆண்களே...!! இனி உஷாரா இருங்க..!!

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள் தொடர்ந்து உணவில் சேர்க்கப்பட வேண்டும். குறிப்பாக செரிமான பிரச்சனைகள் அல்லது மலச்சிக்கல் உள்ளவர்கள், இதை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது. பழங்கள் மற்றும் காய்கறிகள் இந்த எல்லா பிரச்சனைகளையும் போக்க உதவுகின்றன. முடிந்தவரை பருவகாலங்களில் கிடைக்கும் பழங்களை உங்களுடைய உணவுகளில் சேர்த்துக்கொள்ளுங்கள். அது உடலுக்கு பல்வேறு வகையில் நன்மையை சேர்க்கின்றன.

அத்திப்பழம் மற்றும் திராட்சை

அத்திப்பழம் செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. திராட்சையும் அப்படித்தான். அத்திப்பழங்களும் பெரும்பாலும் உலர்ந்த நிலையில்தான் கிடைக்கும். இந்த இரண்டையும் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் சாப்பிடுவது நல்லது. விரைவாக மலச்சிக்கல் பிரச்னை குணமடைந்துவிடும்.

Follow Us:
Download App:
  • android
  • ios