மாரடைப்பு வருவதை தலைமுடியை வைத்தே கண்டுபிடிக்கலாம்:

ஆரோக்கியமாக இருந்த ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விடுவதை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம். 

அதற்கு அவர்களின் வேலை, குடும்பம் சூழ்நிலைகள், உடல்பருமன் மற்றும் மனஅழுத்தம் இது போன்ற பல காரணங்களினால்தான் திடீரென மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்கள் ஏற்படுகிறது.

ஆனால், இதுகுறித்த ஆராய்ச்சியின்போது, ஒருவரின் தலைமுடியில் உள்ள கார்டிசாலின் அடர்த்தியை வைத்து அவருக்கு மாரடைப்பு ஏற்படுமா? என்பதை கூறிவிடலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

எப்படியெனில் ஒருவருடைய தலைமுடியில் உள்ள கார்டிசால் எனும் ஹார்மோன்கள் அதிக அளவில் இருந்தால் மாரடைப்பு அவர்களுக்கு கண்டிப்பாக ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாம். இந்த ஆய்வை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.