Asianet News TamilAsianet News Tamil

பொருத்தமான ஆணுறைகளை கண்டறிவது எப்படி..? முழு விபரம் இதோ..!!

ஆணுறையைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் நல்லது. ஆணுறைகளை எப்போதும் கவனமாக கையாள வேண்டும். எந்த வகையான ஆணுறை உங்களுக்கு சரியானது என்பதை தெரிந்துகொண்டு, அதை பயன்படுத்த துவங்குங்கள்.

condoms know this before buying
Author
First Published Jan 19, 2023, 1:26 PM IST

நமது நாட்டில் பாலியல் சார்ந்த பிரச்னைகள் மற்றும் தேவைகளை பேசுவதை தவறாக புரிந்துகொள்ளப்படும். ஆணுறைகள் பெரும்பாலும் கணவன் மற்றும் மனைவி அல்லது தம்பதிகளுக்கு இடையேயான உரையாடல்களில் மட்டுமே இடம்பெறுகின்றன. ஆனால் அவர்களில் யாரும் அதன் பயன்பாடு பற்றி சிந்திப்பது கிடையாது. இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பலரும் ஆணுறைகளை போதுமான தேவைக்கு வாங்குகின்றனர். ஆனால் அதை பயன்படுத்தாமல் தூக்கி எறிந்து விடுவதாக தெரியவந்துள்ளது. ஆனால் உடலுறவின் போது ஆணுறைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றைப் பற்றி சரியாகத் தெரிந்து கொள்வது அவசியம். ஆணுறை வாங்கும் முன், அதை எதற்காகப் பயன்படுத்துகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் அதை ஒரு கருத்தடை பயன்பாட்டுக்கு வாங்குகிறீர்களா? அல்லது பால்வினை நோய்களைத் தவிர்ப்பதற்காக வாங்குகிறீர்களா என்பதைக் கவனியுங்கள். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் ஒவ்வாமை எதிர்விளைவுகளைத் தவிர்க்க ஆணுறைகளில் உள்ள பொருட்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். எனவே பல்வேறு வகையான ஆணுறைகள் என்ன, அவற்றின் பண்புகள் என்ன என்பதை விரிவாக தெரிந்துகொள்வோம்.

லேடெக்ஸ் ஆணுறை

இயற்கையாக கிடைக்கும் ரப்பர்களில் இருந்து தயாரிக்கப்படுபவை தான் லேடெக்ஸ் ஆணுறைகள். இதை முறையாக பயன்படுத்துவதன் மூலம் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் மற்றும் தேவையற்ற கர்ப்பங்களைத் தடுக்கலாம். ஒருவேளை லேடெக்ஸ் ஒவ்வாமை கொண்டவர்கள், இதை பயன்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறது. ஒருவேளை இதை நீங்கள் மேலும் பயன்படுத்தத் துவங்கினால் அவை அரிப்பு மற்றும் வெடிப்புகளை ஏற்படுத்தலாம். லேடெக்ஸ் ஆணுறைகள் எண்ணெய் சார்ந்த லூப்ரிகண்டுகள், வாஸ்லைன் அல்லது பேபி ஆயில் ஆகியவற்றுடன் பயன்படுத்தினால் நழுவிவிடும். எனவே அதற்கு பதிலாக நீர் சார்ந்த லூப்ரிகண்டுகளை பயன்படுத்துங்கள். அவை ஆணுறைகளை உறுதியாக பிடித்துக்கொள்ளும்.

மெல்லிய ஆணுறைகள்

இந்த ஆணுறைகள் மெல்லிய மரப்பால் செய்யப்பட்டவை மற்றும் உடலுறவின் போது அதிக உணர்வை அளிக்கின்றன. இது உடைய வாய்ப்பில்லை மற்றும் தேவையற்ற கர்ப்பத்தைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும். மெல்லிய மற்றும் மிக மெல்லிய ஆணுறைகள் லூப்ரிகேஷன் இல்லாமலேயே பயன்படுத்தலாம். ஆனால் சில ஆண்கள் தடிமனான ஆணுறைகளை தேர்வு செய்கிறார்கள். இதனால் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

பெரிதாக்கப்பட்ட ஆணுறை

ஆணுறை மிகவும் சிறியதாக இருந்தால், அது கிழிக்கலாம் அல்லது எரிச்சலை ஏற்படுத்தலாம். ஒருவேளை அது பெரியதாக இருக்கும்பட்சத்தில் அது எளிதில் நழுவக்கூடும். அதனால்தான் நீங்கள் வாங்கவிருக்கும் ஆணுறையின் அளவைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். ரப்பருக்கு ஒவ்வாமை இல்லாவிட்டால், லேடக்ஸ் ஆணுறையைப் பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால் அது மிகவும் அகலமானது. தேவைக்கு ஏற்ப அது தனது அளவை மாற்றிக்கொள்ளும். 

இதையும் படிங்க: உடலுறவு சார்ந்த பெண்களின் 5 விதமான எதிர்பார்ப்புகள்..!!

பாலிசோபிரீன் ஆணுறை

லேடெக்ஸில் ஒவ்வாமை கொண்டவர்கள் தாராளமாக பாலிசோபிரீன் ஆணுறைகளை பயன்படுத்தலாம். இவை எஃப்.டி.ஏ-அங்கீகரிக்கப்பட்ட செயற்கை ரப்பரின் வடிவமாகும். இந்த பொருளால் செய்யப்பட்ட ஆணுறைகள் மென்மையானதாக இருக்கும். அவை கிழிவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. நன்றாக விரிவடையவும் செய்யும். இது STI மற்றும் தேவையற்ற கர்ப்பத்திலிருந்து உங்களை திறம்பட பாதுகாக்கும். பாலிசோபிரீன் ஆணுறைகள் ஒப்பீட்டளவில் தடிமனானவை, அதன்காரணமாகவே சிலர் அதை பயன்படுத்த தயங்குகின்றனர்.

விந்தணுக் கொல்லி ஆணுறை

இதுபோன்ற ஆணுறைகளில் விந்தணுக்களைக் கொல்லும் ரசாயனம் பூசப்பட்டுள்ளது. தேவையற்ற கர்ப்பத்திற்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை வழங்குவதே இதன் நோக்கம். இந்த பொருள் ஒரு மசகு எண்ணெய் போல செயல்படுகிறது. ஆனால் சில நேரங்களில் இது யோனி அல்லது யோனியின் வெளிப்புறங்களில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். ஆட்டுக்குட்டியின் குடலில் இருந்தும் கூடு ஆணுறைகள் தயாரிக்கப்படுகின்றன. லேடெக்ஸ் ஒவ்வாமை கொண்டவர்களுக்காக இது விற்பனை செய்யப்படுகிறது. 

இதையும் படிங்க: அதிகாலையில் உடலுறவு கொள்வது ரொம்ப நல்லதாம்! ஏன் தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios