எட்டு வடிவில் நடைபயிற்சி செய்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
நடைபயிற்சி என்பது உடற்பயிற்சியிலேயே மிகவும் எளிய மற்றும் சிறந்த பயிற்சியாகும். உடல் எடை குறைப்பதும் முதல் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் நடைபயிற்சி மிகவும் நன்மை பயக்கும். அதிலும் 8 வடிவ நடைபயிற்சி செய்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான தன்மைகள் கிடைக்கும். தோட்டப் பகுதி, வீட்டின் மொட்டை மாடியில் போன்ற இடங்களில் எட்டு வடிவத்தை அமைத்து நடக்கலாம். இந்த நடைப்பயிற்சி செய்வதற்கு வேகமாக நடக்க வேண்டிய அவசியமில்லை. மிதமான வேகத்திலேயே நடக்கலாம். இப்போது 8 வடிவ நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எட்டு வடிவ நடைபயிற்சி செய்வதன் நன்மைகள் :
- இடுப்பு வலி, குதிகால் வலி, மூட்டு வலி ஆகியவற்றிற்கு இந்த எட்டு வடிவ நடைபயிற்சி மிகவும் நன்மை பயக்கும்.
- உடல் எடை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கவும், செரிமான உறுப்பின் செயல் திறனை அதிகரிக்கவும் இந்த எட்டு வடிவ நடைபயிற்சி பெரிதும் உதவும்.
- உடல் மற்றும் மன சோர்வை நீக்கி உற்சகத்தை வழங்கும். வாத நோய்களுக்கான எதிரி இந்த எட்டு வடிவ வாக்கிங் தான்.
- எட்டு வடிவில் நடப்பதால் தசைகள் வலுப்படுத்தப்படுகிறது.
- நினைவாற்றல் மற்றும் கவனத்தை அதிகரிக்க எட்டு வடிவ நடைபயிற்சி உதவும்.
- இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த நடைபயிற்சி உதவும்.
- நேரான நடைபயிற்சியை விட அதிக கலோரிகளை எரிக்க இந்த 8 வடிவ நடைபயிற்சி உதவுகிறது
எப்படி செய்ய வேண்டும்?
- தரையில் எட்டு வடிவம் வரைந்து அதன் மீது சீரான வேகத்தில் நடக்க தொடங்கலாம். இதை 10 முதல் 15 நிமிடங்கள் வரை செய்யலாம். மேலும் உங்களது உடல் நிலைக்கு ஏற்ப நடக்கும் நேரத்தை அதிகரிக்கலாம்.
- எட்டு வடிவ நடைபயிற்சியை காலையில் வெறும் வயிற்றில் செய்வது கூடுதல் பலன்களை தரும்.

