- Home
- உடல்நலம்
- Walking for Weight Loss : எடை குறைய 'வாக்கிங்'.. இப்படி 'தினமும்' நடங்க... ஜிம் போகாமலே எடை ஜெட் வேகத்தில் குறையும்!
Walking for Weight Loss : எடை குறைய 'வாக்கிங்'.. இப்படி 'தினமும்' நடங்க... ஜிம் போகாமலே எடை ஜெட் வேகத்தில் குறையும்!
நடைப்பயிற்சி மூலம் எடையை குறைக்க பின்பற்ற வேண்டிய ஐந்து எளிய வழிகளை குறித்து இங்கு பார்க்கலாம்.

Walking for Weight Loss
இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைப்பது என்பது ஒரு பெரிய சவாலான விஷயமாக மாறிவிட்டது. எடையை குறைக்க பலர் மணிக்கணக்கில் ஜிம்மில் வேர்வை சிந்திக்கிறார்கள். இன்னும் சிலர் கடுமையான டயட்டை பின்பற்றுகிறார்கள். இருப்பினும், இவை ஏதுமில்லாமல் வெறும் நடைப்பயிற்சி மூலம் எடையை சுலபமாக குறைக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் சாதாரணமாக நடப்பதை தவிர சில விஷயங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் எடையை எளிதாக குறைக்கலாம். எனவே, நடைப்பயிற்சி மூலம் எடையை குறைக்க பின்பற்ற வேண்டிய ஐந்து எளிய வழிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
நடைப்பயிற்சி செய்வதன் நன்மைகள் :
தினமும் நடைபயிற்சி செய்து வந்தால் கலோரிகள் எரிக்கப்படும், உடலின் வளர்ச்சிதை மாற்றம் துரிதப்படும் மற்றும் செரிமானம் மேம்படும். நடைபயிற்சியானது எல்லா வயதினரும் செய்யக்கூடிய மிகவும் எளிய உடற்பயிற்சியாகும். தொடர்ந்து நடப்பது மூலம் மூட்டு வலி ஏற்படும் அபாயமும் குறையும்.
உணவுக்குப் பிறகு நடப்பது :
பலரும் சாப்பிட்ட பிறகு படுத்துக் கொள்வார்கள் அல்லது நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து படி வேலை செய்ய தொடங்குவார்கள். ஆனால் உணவுக்கு பிறகு சுமார் 10-20 நிமிடங்களாவது வேகமாக நடந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும் உணவானது விரைவாக ஜீரணமாகும் மற்றும் உடலில் கொழுப்பு சேருவது தடுக்கப்படும்.
பவர் வாக்கிங் (Power Walking) :
பவர் வாக்கிங் என்பது சாதாரண நடைபயிற்சி விட வேகமான ஆற்றல்மிக்க நடைபயிற்சி ஆகும். இந்த நடை பயிற்சியில் கைகள், கால்கள் மற்றும் இடுப்பை அதிக அசைவுடன் பயன்படுத்தி நடப்பதாகும். இது இதயத்துடிப்பை அதிகரிக்கும் மற்றும் கலோரிகளை வேகமாக எரிக்க உதவும். மேலும் முழங்கால்களில் குறைந்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.
படிக்கட்டுகளில் ஏறுதல் :
தரையில் நடப்பதை விட படிக்கட்டுகளில் ஏறுவது விரைவான எடை இழுப்புக்கு உதவும். அதாவது இது தொடை மற்றும் வயிற்று தசைகளில் அழுத்தத்தை அதிகரிக்கும். முக்கியமாக பிடிவாதமான கொழுப்பைக் கூட விரைவாக இருக்க உதவும்.
இடைவேளை வாக்கிங் :
ஒரே வேகத்தில் நடக்காமல் வெவ்வேறு வேகத்தில் நடப்பது தான் இடைவேளை நடைபயிற்சியாகும். உதாரணமாக ஒரு நிமிடம் வேகமாகவும், அடுத்த நிமிடம் மெதுவாகவும் நடக்கவும். இப்படி செய்து வந்தால் உடலில் கொழுப்பு எரியும் செயல்முறையானது இரட்டிப்பாகும்.

