சக்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய 5 இனிப்பு உணவுகள்..!!

பொதுவாக மருத்துவர்கள் முதல் வீட்டிலுள்ளவரை வரை, அனைவரும் சக்கரை நோயாளிகளுக்கு இனிப்பு கையிலே தொடக்கூடாது என்று அறிவுரை வழங்குவது வழக்கம். இதனால் அவர்கள் ஸ்வீட் பக்கம் தலைவைத்து படுக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
 

5 sweet dishes can eaten by daibetes for sugar cravings

சக்கரை நோயாளிகள் வாயைக் கட்டியே ஆகவேண்டும். அதை தவிர வேறு வழியே கிடையாது என்பது தான் உண்மை. எனினும் இனிபை கண்டதும் அவர்களால் அவர்களுடைய வாயை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுகிறது. இதனால் யாருக்கும் தெரியாமல் இனிப்பு சாப்பிட்டுவிட்டு, கமுக்கென்று இருந்துவிடுவார்கள். இதனால் பின்நாளில் அவர்களுக்கு பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. வாயையும் கட்டுப்படுத்த முடியாது, சக்கரைப் பாதிப்பு ஏற்படுவதையும் தடுக்க வேண்டும் என்கிற நிலை வரும்போது, அதற்கு சில இனிப்பு வகைகள் தீர்வாக அமைகின்றன. அதுதொடர்பான தகவல்கள் கீழே பரிந்துரைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து படித்துப் பாருங்கள்.

இனிப்பு குறைவான பழங்கள்

நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பு சாப்பிடுவதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், இனிப்புச்சுவை குறைவாக கொண்ட, பெர்ரி வகையிலான பழங்களை சாப்பிடலாம். இதனால் இனிப்பு சாப்பிட வேண்டும் என்கிற தாகம் இருக்காது. பெர்ரி பழங்களை தவிர, சிட்ரஸ், மாதுளை, ஆப்பிள் வகை பழங்களையும் அடிக்கடி நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.

வாழைப்பழ பனிக்கூழ்

தமிழில் பனிக்கூழ் என்றால் ஐஸ்கிரீமாகும். பொதுவாகவே வாழைப்பழங்களில் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உங்களுக்கு இனிப்பு சாப்பிடணும் என்று தோன்றுபோது, ஒரு அரை வாழைப்பழத்தை மட்டும் சாப்பிடுங்கள். இது ஸ்வீட் சாப்பிட்ட திருப்தியை தரும். ஒருவேளை அப்போதும் இனிப்புத் தாகம் அடங்கவில்லை என்றால், வாழைப்பழங்களில் பனிக்கூழ் செய்து விற்கப்படுகிறது. அதை சாப்பிடலாம்.

ஃப்ரூட் கேக்

தானியங்கள், பழங்கள் கொண்ட செய்யப்படும் ஃப்ரூட் கேக்குகளில் பெரியளவு இனிப்புச் சுவை இருக்காது. இதற்கு சரியான உதாரணம் பிளம் கேக். இனிப்புச் சுவையை சாப்பிட வேண்டும் என்கிற வேட்கை உருவாகும் போது, நீரிழிவு நோயாளிகள் இதுபோன்ற கேக்குகளை சாப்பிடலாம். அதேசமயத்தில் கேக்குகள் மைதா மாவினால் செய்யப்படுகின்றன என்கிற கவனம் இருக்கட்டும். தற்போது சந்தைகளில் தானியங்கல் கொண்டு தயாரிக்கப்பட்டும் குறைந்த இனிப்புச்சுவை கொண்ட கேக்குகள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

காலையில் அரிசிச் சோறு சாப்பிடுபவரா நீங்கள்..?? அப்போ இதப்படிங்க மொதல்ல..!!

டார்க் சாக்லேட்

யாருக்குத்தான் சாக்லேட்டுகள் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதற்கு அடிமையாக உள்ளோம். ஆனால் கடைகளில் சாதாரணமாக கிடைக்கும் சாக்லேட்டுகளில் இனிப்புச் சுவை அதிகமாக இருக்கும். அதற்கு பதிலாக, டார்க் சாக்லேட் என்று சொல்லப்படுகிற மிட்டாய்களை வாங்கி நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம். இதன்மூலம் ரத்தத்தில் சக்கரை அளவு அதிகாரிக்காது, மேலும் இதில் கானப்படும்  ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் மற்றும் ஃபிளவனாய்டுகள் இன்சுலின் சுரப்பு ஹார்மோனைத் தூண்டுகின்றன.

க்ரீக் தயிர்

பெர்ரி வகை பழங்களை க்ரீக் யோகர்ட் என்று சொல்லப்படுகிற தயிரில் சேர்த்து சாப்பிடுவது நல்ல சுவையாக இருக்கும். அதனுடன் நட்ஸ், ஒரு ஸ்பூன் நாட்டுச் சக்கரையை சேர்த்துக்கொண்டால் தித்திப்பாக இருக்கும். ஒருவேளை இதை மருத்துவப் பொருட்களுடன் சாப்பிட விரும்புவோர், க்ரீக் தயிரில் வெறும் துளசி மற்றும் சக்கரையை சேர்த்து சாப்பிடலாம். முடிந்தவரை ஃபீரிசரில் வைத்து சாப்பிடுவதை தவிர்க்கவும். ஒருநாளைக்கு ஒரு கப் க்ரீக் யோகர்ட் சாப்பிட்டால் போதுமானது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios