2025 Holiday List: 2025-ம் ஆண்டு வரிசை கட்டி வரும் விடுமுறைகள்! பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு!
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் அரசு விடுமுறை நாட்கள், வங்கி விடுமுறைகள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குடியரசு தினம், சுதந்திர தினம், தீபாவளி போன்ற முக்கிய விடுமுறை நாட்களுடன், வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
2024ம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு மாதங்களே உள்ளன. 2025-ம் ஆண்டு நெருங்கி வரும் நிலையில் எத்தனை நாட்கள் பொது விடுமுறை நாட்கள் இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் ஆர்வமாக இருப்பார்கள். அரசு விடுமுறை நாட்கள், வங்கி விடுமுறைகள், பொது விடுமுறைகள், மத்திய அரசு மற்றும் மாநில அரசு விடுமுறை என பல விடுமுறை நாட்கள் அடங்கும். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
2025 விடுமுறை நாட்கள்
ஜனவரி 26 குடியரசு தினம் (ஞாயிற்றுக்கிழமை), பிப்ரவர் 26 மகாசிவராத்திரி (புதன்கிழமை), மார்ச் 14 ஹோலி (வெள்ளிக்கிழமை), மார்ச் 31 ரம்ஜான்(வெள்ளிக்கிழமை),
ஏப்ரல் 10 மகாவீரர் ஜெயந்தி (வியாழக்கிழமை), ஏப்ரல் 18 பெரிய வெள்ளி (வெள்ளிக்கிழமை), மே 12 புத்த பூர்ணிமா (திங்கள்கிழமை), ஜூன் 7 பக்ரீத்(சனிக்கிழமை), ஜூலை 6 முஹரம்(ஞாயிற்றுக்கிழமை), ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்(வெள்ளிக்கிழமை), ஆகஸ்ட் 16 கிருஷ்ணர் ஜெயந்தி (சனிக்கிழமை), செப்டம்பர் 5 மிலாடிநபி (வெள்ளிக்கிழமை), அக்டோபர் 2 தசரா (வியாழக்கிழமை), அக்டோபர் 20 தீபாவளி(திங்கள்கிழமை), நவம்பர் 5 குருநாநக் ஜெயந்தி(புதன்கிழமை), டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் (வியாழக்கிழமை)
இதேபோல் வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பணியாளரும் ஏதேனும் இரண்டு வரையறுக்கப்பட்ட விடுமுறைகளை எடுத்துக் கொள்ளலாம்.
இதேபோல் வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பணியாளரும் ஏதேனும் இரண்டு வரையறுக்கப்பட்ட விடுமுறைகளை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Holiday List 2025
ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டு (புதன்), ஜனவரி 6 குரு கோபிந்த் நாள்(திங்கள் கிழமை), ஜனவரி 14 பொங்கல் (செவ்வாய் கிழமை), பிப்ரவரி 2 பசந்த் பஞ்சமி(ஞாயிற்றுக்கிழமை), பிப்ரவரி 12 குரு ரவி தாஸ் நாள்(புதன்கிழமை), பிப்ரவரி 19 சிவாஜி ஜெயந்தி (புதன்கிழமை), பிப்ரவரி 23 தயானந்த சரஸ்வதி தினம் (ஞாயிற்றுக்கிழமை), மார்ச் 13 ஹோலிகா தஹன் (வியாழக்கிழமை), மார்ச் 14 தோல்யாத்ரா (வெள்ளிக்கிழமை), ஏப்ரல் 16 ராம்நவமி (ஞாயிற்றுக்கிழமை), ஆகஸ்ட் 27 விநாயக சதூர்த்தி(புதன்கிழமை), செப்டம்பர் 5 ஓணம் (வெள்ளிக்கிழமை), செப்டம்பர் 29 சப்தமி (திங்கள்கிழமை).
செப்டம்பர் 30 மஹாஷ்டமி (செவ்வாய்க்கிழமை), அக்டோபர் 1 மகாநவமி (புதன்கிழமை), அக்டோபர் 7 வால்மிகி நாள்(செவ்வாய்க்கிழமை), அக்டோபர் 10 கர்வா சோத் (வெள்ளிக்கிழமை), அக்டோபர் 20 நரக சதுர்தசி (திங்கள்கிழமை), அக்டோபர் 22 கோவர்தன்பூஜா(புதன்கிழமை), அக்டோபர் 23 பாய் தூஜ் (வியாழக்கிழமை), அக்டோபர் 28 சூர்ய சஷ்டி (செவ்வாய்க்கிழமை), டிசம்பர் 24 கிறிஸ்துமஸ் ஈவ் (புதன்கிழமை)