MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • வேலை தேடும் இளைஞர்களுக்கு சூப்பர் வேலை வாய்ப்பு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட குட்நியூஸ்!

வேலை தேடும் இளைஞர்களுக்கு சூப்பர் வேலை வாய்ப்பு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட குட்நியூஸ்!

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் நவம்பர் 22, 2024 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

2 Min read
Author : vinoth kumar
Published : Nov 19 2024, 07:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இன்றைய இளைஞர்கள் எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்பதால் போட்டா போட்டிக்கொண்டு படித்து வருகின்றனர்.  ஆனால் ஆயிரம் பேர் வேலைக்கு சுமார் 10 லட்சம் முதல் 20 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர். எனவே அனைவருக்கும் அரசு வேலை கிடைப்பது சாத்தியமே இல்லை. இதனால் இன்றைய இளைஞர்களின் அரசு வேலை என்பது கனவாகவே இருந்து வருகிறது.  இன்னும் சில இளைஞர்கள் வேலை கிடைக்காத விரக்தியில் விபரீத முடிவை எடுக்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இந்நிலையில் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் இளைஞர்கள் தவித்து வரும் நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் சூப்பர் அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.

35

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து 22.11.2024 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை 32 கிண்டி. ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: 2025 Holiday List: 2025-ம் ஆண்டு வரிசை கட்டி வரும் விடுமுறைகள்! பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு!

45

இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

55

இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தனியார் வேலை வாய்ப்பு முகாம்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Work From Home: வீட்டிலிருந்து வேலை செய்கிறீர்களா? இந்த பழக்கங்கள் உங்கள் Career-ஐ அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்!
Recommended image2
State Bank of India: SBI வழங்கும் ரூ.75 லட்சம் கடன்.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?
Recommended image3
Elon Musk: சம்பளம் மட்டும் இல்லை... ஷேரும் தர்றாரு! உலகையே ஆச்சரியப்பட வைத்த எலான் மஸ்க்! வேலை இருந்தா சொல்லுங்கப்பா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved