இந்த 5 பழக்கம் உங்களிடம் இருந்தால், உங்கள் கிட்னி ‘சட்னி’ தான்..!!

புகைபிடிப்பதை நிறுத்துவது ரத்த அழுத்தத்தை மேம்படுத்தவும் உதவும். நாள்பட்ட மது அருந்துதல் கல்லீரல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் சிறுநீரக நலன் தான் கெடும்.
 

5 bad habits that damage your kidney function

சிறுநீரகங்கள் மூலம் நமது ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. மேலும் உடலில் சேரும் நச்சுக்கள் மற்றும் கழிவுகள் உள்ளிட்டவைற்றை வெளியேற்றுகிறது. இந்த பணிகளில் ஏதேனும் கோளாறும் நடந்தால், உடலில் பல சிக்கல்கள் உருவாகும். அதேபோல நம் உடல்நலப் பிரச்னைகளுக்காக தொடர்ந்து வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட்டு வந்தாலும், சிறுநீர செயல்பாட்டில் பிரச்னை ஏற்படும். இத்தகைய மருந்துகளின் அதிகப்படியாக உட்கொள்வது சிறுநீரகத்திற்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும். அதேபோல பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது, எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்தே இருப்பது போன்ற விஷயங்கள் காரணமாகவும் சிறுநீரகத்தில் செயலிழப்பு ஏற்படுகிறது. 

புரதம் அளவு முக்கியம்

அதிகளவில் புரதம் எடுத்துக்கொள்வது குடலுக்கு தீங்கை ஏற்படுத்தும். அசைவ உணவுகளை சாப்பிடுவதன் மூலம் புரதம் ரத்தத்தில் கலந்து, அதிகளவு அமிலத்தை உருவாக்கிறது. அதனால் சிறுநீரகங்கள் தங்களுக்குத் தேவையான அமிலத்தை அகற்ற முடியாமல் தவிக்கும். இதன்காரணமாக உடல் உறுப்புகளுக்கு தீங்கு ஏற்படும்.

உப்பு கட்டுக்குள் இருக்க வேண்டும்

அதிகளவில் உப்பு சாப்பிடுவது சிறுநீரகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடல்நலனுக்கும் பிரச்னை தான். ஏனென்றால் உப்பு அதிகளவிலுள்ள உணவுகளில் சோடியம் அதிகமுள்ளது. இதனால் ரத்த அழுத்தம் அதிகரித்து, காலப்போக்கில் சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கிறது. அதிகப்படியான அளவு உப்பு சாப்பிடுவதால், சிறுநீரகங்களில் கற்களை ஏற்படுத்தும் என இத்தாலியில் உள்ள சான் ஜியோவானி போஸ்கோ மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வலி நிவாரணி மாத்திரைகள்

வலி நிவாரணிகளை அதிகமாகப் பயன்படுத்துவது சிறுநீரகத்திற்கு ஆபத்தானது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. வலிநிவாரணிகளின் நீண்டகால பயன்பாடு சிறுநீரக புற்றுநோயின் அபாயத்தை 50 சதவிகிதம் அதிகரிக்கிறது என்று இன்டர்னல் மெடிசின் காப்பகத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது.

ஆண்களை விடவும் பெண்கள் அதிகமானோர் குண்டாக இருப்பதற்கு காரணம் இதுதான்..!!

பதப்படுத்தப்பட்ட உணவில் இருக்கும் அபாயம்

பதப்படுத்தப்பட்ட உணவு உண்மையில் சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும். காரணம், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகளவு இருக்கும். அதை சாப்பிடுவதால் சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்படும். பாஸ்டனில் உள்ள பிரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனை நடத்திய ஆய்வில், மிகக் குறைந்த தூக்கம் சிறுநீரக செயல்பாட்டில் விரைவான சரிவுக்கு வழிவகுப்பது தெரியவந்துள்ளது. அதிகப்படியான குடிப்பழக்கம் நாள்பட்ட சிறுநீரக நோய் அபாயத்தை இரட்டிப்பாக்குகிறது என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகைப்பிடிப்பதிலுள்ள ஆபத்து

புகைபிடித்தல் சிறுநீரகத்தை சேதப்படுத்துவது போல், புகைபிடிக்கும் போது இதயம் மற்றும் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுகிறது என்பது உண்மை. இதனால் சிறுநீரகத்துக்கு செல்லக்கூடிய ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இது காலப்போக்கில் உடல்நலப் பிரச்னைக்கு வழிவகுக்கிறது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நீண்ட கால சிகரெட் புகைத்தல் இதய செயலிழப்பு அபாயத்தை இரட்டிப்பாக்குகிறது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios