ஒரு டீ விலை 20 ரூபாயா.!!! பொதுமக்களுக்கு ஷாக் கொடுத்து தேநீர் கடைகள்
சென்னையில் டீ, காபி விலை உயர்ந்த நிலையில், கோவையில் டீ விலை 20 ரூபாயாகவும், காபி விலை 26 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் டீ பிரியர்கள்
இந்தியாவில் டீ, காபியை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் டீ, காபிக்கு அடிமையாக உள்ளனர். குறைந்த ஊதியத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு காலையில் ஒரு கிளாஸ் டீ தான் காலை உணவாகவே உள்ளது.
இப்படியாக டீ மக்களுடன் இரண்டறக் கலந்து விட்ட நிலையில், சென்னை உள்ளிட்ட இடங்களில் டீ, காபி விலையானது கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் உயர்ந்தது. அந்த வகையில் ஒரு கிளாஸ் டீ 12 ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும், ஒரு காபி 15 ரூபாயில் இருந்து 20 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியானது
டீ விலை அதிகரிப்பு
விலை உயர்வு அறிவிப்பால் டீ பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சம்பள உயர்வு மட்டும் கிடைக்கவில்லையே ஆனால் டீ விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறதே என புலம்பி வருகிறார்கள். குறிப்பாக ஒரு நாளைக்கு காலை மதியம் இரவு என குறைந்தது ஒருவர் 3 முதல் 4 டீ குடித்து வருகிறார்கள்.
எனவே ஒரு நாளைக்கே டீக்கு மட்டும் 60 ரூபாய் செலவாகி வருவதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு டீயின் விலை 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
டீ பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த கோவை
கோவையை பொறுத்தவரையில் சென்னையில் விலை ஏற்றம் செய்த பிறகு என்ன விலை இருக்குமோ அதே விலையில் தான் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் கோவையில் ஒரு டீயின் விலையானது 15 ரூபாயிலிருந்து 20 ரூபாயாகவும், காபியின் விலை 20 ரூபாயிலிருந்து 26 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் டீ ப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது மட்டுமில்லாமல் இஞ்சி டீயின் விலை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Black tea 17 ரூபாய்
ஆச்சரியம் அளிக்கும் விதமாக பால் பயன்படுத்தப்படாத Black tea 17 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விலை ஏற்றம் கோவையில் பிரபலமான பல பேக்கரிகளில் கடந்த 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
பெரும்பாலான பேக்கரிகளில் இந்த விலை உயர்வுடன் GST யும் கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகின்றது. மக்களின் அன்றாட அத்தியாவசிய பானங்களில் ஒன்றான டீ மற்றும் காபியின் இந்த விலை ஏற்றம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.