- Home
- Tamil Nadu News
- ஆசிரியர்கள் ஷாக்... பணியில் தொடர சிக்கல்.? பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி ஆக்ஷன்
ஆசிரியர்கள் ஷாக்... பணியில் தொடர சிக்கல்.? பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி ஆக்ஷன்
தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பணியில் நீடிக்க ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து தமிழக அரசு முக்கிய முடிவு எடுக்கவுள்ளது.

தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பணியில் நீடிக்க, பணி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் இருந்து வெளியேற வேண்டும். அவர்கள் ஓய்வுபெற்றதாக கருதப்பட்டு, அவர்களுக்கான ஓய்வுகாலப் பயன்கள் அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் 1.50 லட்சம் பேருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு காரணமாக, 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது, குறிப்பாக ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணிக்காலம் இருக்கக்கூடிய ஆசிரியர்கள், வேலையில் தொடரவே அவர்கள் கண்டிப்பாக தகுதி தேர்வு எழுத வேண்டும் என்ற நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அவரச அவசரமாக தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர், சட்ட நிபுணர்களோடு விரிவாக ஆலோசனை மேற்கொண்டார், இதனையடுத்து இன்று மாலை பள்ளி கல்வி அமைச்சர் அன்பில், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளோடு இந்த விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில், மாவட்ட வாரியாக ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டிய நிலையில் உள்ள ஆசிரியர்கள் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
அதேபோன்று ஆசிரியர் தகுதி தேர்வை முடித்து பணியாற்றி வரக்கூடிய ஆசிரியர்கள் எண்ணிக்கை விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன . சரியான புள்ளி விவரங்கள் பெற்ற பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சரோடு ஆலோசனை நடத்தி உரிய முடிவை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.