டீ, காபி விலை அதிரடி உயர்வு..! எவ்வளவு தெரியுமா? Tea, coffee பிரியர்கள் ஷாக்..!
சென்னையில் நாளை முதல் டீ, காபி விலை உயர உள்ளது. முழு விலைப்பட்டியலையும் விரிவாக பார்ப்போம்.

Tea, Coffee Price Hike in Chennai
இந்தியாவில் டீ, காபியை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெரும்பாலானவர்கள் டீ, காபிக்கு அடிமையாக உள்ளனர். அதுவும் சென்னை போன்ற பெரு நகரங்களில் குறைந்த ஊதியத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு கிளாஸ் டீ தான் காலை உணவு. ஒரு சிலருக்கு காலையில் எழுந்தவுடன் டீ குடிக்காவிடில் அந்த நாளே கடந்து போகாது. இப்படியாக டீ, காபி நமது மனங்களில் இரண்டறக் கலந்து விட்ட நிலையில், சென்னையில் நாளை முதல் டீ, காபி விலை உயர உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டீ, காபி விலை உயர்வு
அதாவது சென்னையில் நாளை (செப்டம்பர் 1) முதல் ஒரு கிளாஸ் டீ 12 ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும், ஒரு கிளாஸ் காபி 15 ரூபாயில் இருந்து 20 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்று டீக்கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதேபோல் பால், லெமன் டீ 15 ரூபாயாகவும், ஸ்பெஷல் டீ, ராகி மால்ட் மற்றும் சுக்கு காபி 20 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது. மேலும் ஒரு கிளாஸ் பூஸ்ட், ஹார்லிக்ஸ் ஆகியவை ரூ.25 ஆகவும் விலை உயர்ந்துள்ளன.
விலை உயர்வு ஏன்?
மேலும் டீ, பால், லெமன் டூ பார்சல் ரூ.45 ஆகவும், காபி, சுக்கு காபி, ராகி மால்ட் மற்றும் ஸ்பெஷல் டீ பார்சல் ரூ.60 ஆகவும், பூஸ்ட், ஹார்லிக்ஸ் பார்சல் ஆகியவை ரூ.70 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. பால் விலை உயர்வாலும், காபித்துள்ள மற்றும் டீத்தூள் விலை உயர்வாலும், போக்குவரத்து செலவு அதிகரிப்பாலும் டீ, காபி விலை உயர்ந்துள்ளதாக டீக்கடை வியாபாரிகள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
வேலை பார்ப்பவர்கள் ஷாக்
நான் தொடக்கத்திலேயே கூறியபடி குறைந்த ஊதியத்தில் வேலை பார்ப்பவரக்ளுக்கு டீ தான் காலை உணவாக இருந்து வருகிறது. மேலும் கூலித்தொழிலாளர்கள் விரும்பி குடிக்கும் பானமாக டீ உள்ளது. இவர்களுக்கெல்லாம் இந்த விலை உயர்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ''என்னடா இது நாட்டுடல ஒரு டீ கூட குடிக்க முடியாம பண்ணிட்டீங்க'' என்று நெட்டிசன்கள் பலர் சமூகவலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.