சிக்கன், மட்டனை மிஞ்சும் புரோட்டீன் கொண்ட பருப்பு பற்றி தெரியுமா?
சைவ உணவு உண்பவர்களுக்கு சிக்கன், மட்டனை மிஞ்சும் அளவில் புரோட்டீன் இந்த ஒரு பருப்பில் உள்ளது. அது என்ன மற்றும் அதன் நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

Why Moong Dal is The Best Protein Source Than Meat : புரதச்சத்து நம்முடைய உடலுக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். இதுதான் தசைகளை வலுப்படுத்தி உடலுக்கு புதிய உயிரை கொடுக்கும். நாம் சாப்பிடும் பல உணவுப் பொருட்களில் புரதம் நிறைந்துள்ளது. அந்த வகையில், நீங்கள் அசைவம் சாப்பிடாமல் சைவ உணவு சாப்பிடுபவர்கள் என்றால், உங்களது உணவில் புரதம் நன்றாக இருக்க வேண்டும். இதற்கு உங்களது உணவில் பாசிப்பருப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் சைவ உணவு உண்பவர்களுக்கு பாசிப்பருப்பு தான் புரதத்தின் களஞ்சியமாக கருதப்படுகிறது.
பாசிப்பருப்பு
இன்னும் சொல்ல போனால் சிக்கன் மற்றும் மட்டனை விட பாசிப்பருப்பில் தான் அதிகளவு புரதம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் ஆரோக்கியமாக வைக்க புரதச்சத்து உதவுகிறது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலை மிகவும் வலிமையாக வைக்க உதவும். மக்கள் தங்களது உணவில் வாரத்திற்கு 2-3 முறை கண்டிப்பாக பாசிப்பருப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த பருப்பில் அசைவத்தை விட அதிக அளவு புரதம் உள்ளது. பாசிப்பருப்பை உட்கொள்வதன் மூலம் தசைகள் மற்றும் எலும்புகள் பலப்படும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் சொல்லுகின்றனர்.
பாசிப்பருப்பில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்:
பாசிப்பருப்பில் புரதத்தை தவிர நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் இ, இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவற்றின் நல்ல மூலமாக கருதப்படுகிறது. இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம்முடைய உடலுக்கு மிகவும் முக்கியம்.
பாசிப்பருப்பு நன்மைகள்:
1. பாசிப்பருப்பு எளிதில் ஜீரணிக்க கூடியது. இது வயிற்றுக்கு ரொம்பவே நல்லது. இதில் இருக்கும் நார்ச்சத்தை செரிமானத்தை மேம்படுத்துகிறது. எனவே, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் கண்டிப்பாக பாசிப்பருப்பை சாப்பிடுங்கள்.
2. பாசிப்பருப்பு உங்கள் தசைகளில் வலிமையாக்க பெரிதும் உதவிகிறது. இதில் இருக்கும் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், தாமிரம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை உங்களது உடலுக்கு ஒரு வரப் பிரசாதமாக இருக்கும்.
3. பாசிப்பயறு இதயத்திற்கு நல்லது என்று சொல்லப்படுகிறது. எனவே இதை உங்களது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதயம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
பாசிப்பருப்பு நன்மைகள்:
4. பாசிப்பருப்பில் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இது உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதை தடுக்கும் .இதன் காரணமாக உங்களது உடலில் எந்த வகையான கொழுப்பும் சேராது. இதிலிருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உங்களது உடலில் நல்ல கொழுப்பை அதிகரிப்பதன் மூலம் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும்.
5. பாசிப்பருப்பில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளதால், இது ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகின்றது. எனவே இந்த பருப்பு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
இதையும் படிங்க: பாசிப்பயறு ஆரோக்கியம் தான்... ஆனால் தினமும் சாப்பிடாதீங்க... தீமை விளையும்..!!
பாசிப்பருப்பு நன்மைகள்:
6. பாசிப்பருப்பில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இது கரும்புள்ளிகளை குறைக்கவும், சருமத்தை பளபளப்பாக வைக்கவும் உதவிகிறது இது தவிர முடியை வலுப்படுத்தவும் உதவும்.
7. பாசிப்பருப்பில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால் எடை இழப்புக்கு ஏற்ற உணவாகும். இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்கும். மேலும் பசியை குறைத்து நீண்ட நேரம் திருப்தி உணர்வை தக்க வைத்துக் கொள்ளும். எனவே எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பாசிப்பருப்பு மிகவும் நன்மை பயக்கும்.
இதையும் படிங்க: பருப்பு சாப்பிட்டா எடை குறையுமா? நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்