பருப்பு சாப்பிட்டா எடை குறையுமா? நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்
உடல் எடையை குறைக்க பல வழிகளை முயற்சி செய்து கொண்டிருப்பீர்கள். ஆனால் பாசி பருப்பு சாப்பிட்டாலும் உடல் எடை குறையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அது எப்படி என்று இப்போது தெரிந்து கொள்வோம்.
வாரத்திற்கு ஒரு முறையாவது பாசி பருப்பு சாப்பிடுவோம். இந்த பாசி பருப்பு வைத்து செய்யப்படும் கூட்டு ருசியாக இருக்கும். அதனால் தான் பலரும் இந்த பருப்பை விரும்பி சாப்பிடுகிறார்கள். மேலும் இந்த பருப்பு நமது உடலுக்கு தேவையான பல சத்துக்களை அளிக்கிறது. இது நமது உடலுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதில் புரதச்சத்துக்கள், ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை நம்மை பல நோய்களில் இருந்து காக்கின்றன. உங்களுக்கு தெரியுமா? இதை டயட்டில் சேர்த்துக்கொண்டால் உடல் எடையும் குறையும். அது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.
பாசி பருப்பு பண்புகள்
பாசி பருப்பில் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் பல வகையான சத்துக்கள் உள்ளன. இவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் அதிகம் உள்ளன. பாசி பருப்பை வேகவைத்து சாப்பிட்டால் நீங்கள் ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்கலாம். இந்த பருப்பில் எந்த கொழுப்பும் இல்லை. எனவே இதை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது.
எடை குறைப்பு
பாசி பருப்பு சாப்பிட்டால் உங்கள் வளர்சிதை மாற்றம் மேம்படும். மேலும் பாசி பருப்பு உங்களுக்கு அதிக பசி எடுக்க விடாது. இதனால் நீங்கள் குறைவாக சாப்பிடுவீர்கள். இதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாக உடல் எடையை குறைப்பீர்கள். இதை உங்கள் வழக்கமான உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன்களைப் பெறலாம்.
கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது
பாசி பருப்பு சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவும் குறையும். அதுமட்டுமின்றி இந்த பருப்பு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த பருப்பை சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு தேவையான சக்தியும் கிடைக்கும்.
இரத்த சர்க்கரை கட்டுப்பாடு
பாசி பருப்பில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிட்டால் உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த பருப்பு நமது உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
மேம்பட்ட செரிமானம்
பாசி பருப்பு சாப்பிட்டால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் குறையும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் உள்ள பண்புகள் நமது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் உண்ணும் உணவு நன்கு ஜீரணமாகவும் உதவுகிறது.
பாசி பருப்பை உணவில் எப்படி சேர்ப்பது?
பாசி பருப்பை உங்கள் அன்றாட உணவில் பல வழிகளில் சேர்த்துக்கொள்ளலாம். இதை சூப், சாலட், இனிப்பு என பல வகைகளில் பயன்படுத்தலாம். இதை வேகவைத்தோ அல்லது முளைகட்டியோ, பருப்பு குழம்பாகவோ சாப்பிடலாம். இருப்பினும், பாசி பருப்பை சரியாக வேகவைக்கவில்லை என்றால், பிரச்சனைகள் வரலாம். குறிப்பாக வாயு, வயிற்றுப்போக்கு, மயக்ககம் போன்ற பிரச்சினைகள் வரலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது வயிற்று பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.