MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • காலைல வாக்கிங் போறீங்களா? அதை விட 'இந்த' நேரம் நடப்பதால் பல மடங்கு நன்மைகள்!!

காலைல வாக்கிங் போறீங்களா? அதை விட 'இந்த' நேரம் நடப்பதால் பல மடங்கு நன்மைகள்!!

Best Time To Walk : எந்த நேரத்தில் நடைபயிற்சி செய்வது உடலுக்கு 9 வகையான நன்மைகளை வாரி வழங்கும் என இந்தப் பதிவில் காணலாம்.

3 Min read
Author : Kalai Selvi
| Updated : Feb 18 2025, 08:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
காலைல வாக்கிங் போறீங்களா? அதை விட 'இந்த' நேரம் நடப்பதால் பல மடங்கு நன்மைகள்!!

காலைல வாக்கிங் போறீங்களா? அதை விட 'இந்த' நேரம் நடப்பதால் பல மடங்கு நன்மைகள்!!

நடைபயிற்சி மிதமான உடற்பயிற்சி. எந்த உபகரணங்களையும் பயன்படுத்தாமல் ஒட்டுமொத்த உடலுக்கும் பயிற்சி அளிக்க நீங்கள் விரும்பினால் தினமும் நடக்கலாம். நாள்தோறும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடப்பது கூட போதுமானது. ஆனால் விறுவிறுப்பான நடை தான் உடலை நன்கு இயங்க செய்யும். சுறுசுறுப்பாக நடப்பதால் ஆற்றல் அதிகம் செலவிடப்பட்டு உடல் எடை குறையும். மெதுவாக நடந்தால் பயனில்லை என்றில்லை. அதற்கேற்றவாறு பலன் கிடைக்கும். ஆனால் உடலுக்கு 9 வகையான நன்மைகளை பெற எந்த நேரத்தில் நடக்க வேண்டும் என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. எப்போது நடந்தாலும் நன்மை தான் என்றாலும், சாப்பாட்டுக்கு பின் நடப்பது மிகவும் நல்லது. நீங்கள் சாப்பிட்ட பிறகு 10 நிமிடங்கள் முறையே காலை, மாலை, மதியம் என மூன்று நேரங்களிலும் நடந்தால் செரிமானம் மேம்படுகிறது. ரத்ததில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. சாப்பிட்ட பின் நடப்பதால் வயிறு வீக்கம், செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறது. இது தவிர கிடைக்கும் 9 நன்மைகளை இங்கு காணலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
இதய ஆரோக்கியம்:

இதய ஆரோக்கியம்:

சாப்பாட்டிற்கு பின்னர் மிதமான நடைபயிற்சி செய்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். அதுமட்டுமின்றி கெட்ட கொழுப்பின் அளவு குறைகிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. சிறந்த ரத்தம் ஓட்டம் இருப்பதால் இதயத்தின் செயல்பாடு நன்றாக இருக்கும். இதய நோயின் ஆபத்து குறைந்துவிடும்.  

நல்ல தூக்கம்:
 
தினமும் சாப்பிட்ட பின் நடைபயிற்சி செய்வது உடலின் உயிரியல் கடிகாரத்தை நன்கு செயல்பட தூண்டுகிறது. இதனால் உங்களுடைய தூக்க சுழற்சி மேம்படும். இரவில் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். நல்ல தூக்கமே உடலின் பல நோய்களை விரட்ட உதவுகிறது. இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. மூளை நன்கு செயல்பட்டு அறிவாற்றல் மேம்படுகிறது.

36
மன அழுத்தம் குறையும்:

மன அழுத்தம் குறையும்:

நடைபயிற்சி செய்வது உங்களுடைய மனநிலையை மேம்படுத்தும் ஹார்மோன்களை சுரக்க செய்கிறது. உடலில் எண்டோர்பின்கள் சுரப்பதால் மனநிலை சீராகி பதற்றம் குறைகிறது. சாப்பிட்ட பின்னர் குறுநடை போடுவது மனச்சோர்வை குறைக்கும்.

ஆற்றல் அளவு உயரும்:

சாப்பிட்ட பின் குறுநடை போடுவது உடல் முழுக்க ரத்தம் ஓட்டம், ஆக்சிஜன் பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது. இதனால் புத்துணர்வுடன் சுறுசுறுப்பாக உணர்வீர்கள். உடலின் ஆற்றல் அளவை அதிகரிப்பதால் அதிக விழிப்புணர்வுடன் செயல்பட முடியும். படிப்பது, அலுவலக வேலைகளில் ஈடுபாட்டுடன் செயல்பட முடியும்.

இதையும் படிங்க:  நோய்களை நீக்கும் வெறுங்கால் வைத்தியம்.. பலர் அறியாத வாக்கிங் 'டிப்ஸ்'

46
குடல் ஆரோக்கியம்:

குடல் ஆரோக்கியம்:

சாப்பிட்ட பிறகு நடப்பதால் குடலில் ஆரோக்கியமான நுண்ணுயிரிகள் இயங்க சாதகமாக அமையும். நம் உடலில் உள்ள குடல் நுண்ணுயிரிகள் செரிமானம் மேம்பாட்டிற்கு மட்டுமின்றி நோயெதிர்ப்பு மண்டலம், மன ஆரோக்கியத்திற்கு தேவையானதாகும். குடல் உள்ள நல்ல பாக்டீரியாக்களை ஆதரிக்க உணவுக்கு பின்னான நடைபயிற்சி உதவுகிறது.

செரிமானம் மேம்படும்:

நடைபயிற்சி செய்வது செரிமான மண்டலத்தில் உள்ள இரைப்பையை நன்கு இயங்க வைக்கிறது. இரைப்பையில் உணவை சிதைக்கத் தேவையான செரிமான நொதிகளை அதிகம் சுரக்க உதவுகிறது. இதனால் வயிறு உப்புசம், செரிமான கோளாறு, வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. மலச்சிக்கல் அறவே வராமல் தடுக்கப்படும்..  

இதையும் படிங்க:  அடேங்கப்பா!! வெறும் 30 நாள்களில் '4' கிலோ வரை எடை குறையுமா? பெஸ்ட் வாக்கிங் டிப்ஸ்!! 

56
இரத்த சர்க்கரை அளவு சீராகும்:

இரத்த சர்க்கரை அளவு சீராகும்:

சாப்பிட்ட பின் நடப்பதால் உடலில் இன்சுலின் உணர்திறன் அதிகரிக்கும். இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். ஏற்கனவே சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அல்லது நோய் தாக்கும் ஆபத்தில் உள்ளவர்கள் கண்டிப்பாக சாப்பிட்டதும் நடக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் நடக்கலாம்.

மூளையின் செயல்திறன் மேம்படும்:

சாப்பிட்டதும் குறுநடை போடுவது மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் படைப்பாற்றல் மற்றும் அறிவாற்றல் மேம்படும். நினைவாற்றல் அதிகரிக்கும். உணவுக்கு பின் குறுநடை போடுவதால் மனத்தெளிவு கிடைக்கும். இதனால் குழப்பங்களை தீர்க்கும் திறன் மேம்படும்.

66
எடை குறைப்பு:

எடை குறைப்பு:

சாப்பிட்ட பின் நடப்பதால் அதிகமான கலோரிகளை இழக்க முடியும். மூன்று வேளையும் சாப்பிட்ட பின் நடப்பதால் உடல் எடையை விரைவில் குறைக்கலாம். ஏனெனில் உணவுக்கு பின் நடப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இதனால் நீங்கள் உண்ணும் உணவு கொழுப்பாக  சேமிப்பது தடுக்கப்படுகிறது. உடல் எடையை கட்டுக்குள் வைப்பதால் இதய நோய், பக்கவாதம், புற்றுநோய்கள் ஆகியவை தடுக்கப்படுகிறது. உடல் பருமன் காரணமாக ஏற்படும் நோய்களும் தடுக்கப்படுகின்றன.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
நடைப்பயிற்சிக்கு உகந்த நேரம்
காலை நடை
மாலை நேர நடை
வாழ்க்கை முறை
நடைப்பயிற்சியின் நன்மைகள்
நடைப்பயிற்சி குறிப்புகள்
மதிய நேர நடை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
முட்டை பிரியர்கள் கவனத்துக்கு! தினமும் முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? ஆய்வு சொல்வது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved