தினமும் காலை வெறும் வயிற்றில் வாக்கிங்!! பலரும் தெரியாம பண்ற மிஸ்டேக் இதுதான்
தினமும் காலை வெறும் வயிற்றில் மெதுவாக நடப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.

Slow Walk Benefits
Health Benefits of Slow Walk on an Empty Stomach Every Morning : உடலை ஆரோக்கியமாக பேணவும், நாள் முழுக்க சுறுசுறுப்பாக இயங்கவும் காலையில் எழுந்ததும் நடைபயிற்சி மேற்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். அதிலும் வெறும் வயிற்றில் மெதுவாக நடைபயிற்சி செய்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும். இதனால் தசைகளுக்குள் சேமிக்கப்பட்டிருக்கும் கிளைக்கோஜன் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயல்முறை தான் எடை குறைப்புக்கு உதவுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Slow Walk Benefits
மெதுவான நடை:
அன்ன நடை போடுவது உடலுக்கு அற்புத நன்மைகளை வழங்கும் என பலரும் நினைத்திருக்கமாட்டார்கள். வேகமாக நடப்பது தான் எடையை குறைக்க உதவும் சிறந்த பயிற்சி என நினைத்திருப்பார்கள். இது மிகப்பெரிய தவறு. மெதுவாக நடப்பது பல நன்மைகளை கொண்டுள்ளது. சுறுசுறுப்பாக நடப்பது போலவே மெதுவாக நடப்பதும் நல்லதுதான்.
இதையும் படிங்க: தவறான நேரத்தில் 'வாக்கிங்' ஆபத்து!! கோடைகாலத்தில் எப்போது நடக்கனும் தெரியுமா?
Slow Walk Benefits
மெதுவாக நடப்பதன் நன்மைகள்;
வெறும் வயிற்றில் மெதுவாக நடந்தால் இரத்த ஓட்டம் மேம்படுகிறது. மூட்டுகளில் அதிக அழுத்தம் ஏற்படாமல் ஆற்றலை அதிகரிக்கும். காலை வெறும் வயிற்றில் நடந்தால் இரத்த சர்க்கரை அளவு ஒழுங்கிற்கு வரும். மன அழுத்தம் குறைந்து தூக்கத்தின் தரம் மேம்படும். மெதுவாக நடக்க அதிக ஆற்றல் தேவையில்லை. அதனால் அனைத்து வயதினரும் செய்யக்கூடியது.
இதையும் படிங்க: தினமும் எவ்வளவு 'காலடிகள்' நடந்தால் கொழுப்பு ஈஸியா குறையும்? இந்த 'ட்ரிக்' தெரியுமா?
Slow Walk Benefits
வைட்டமின் டி:
அதிகாலை நடைப்பயிற்சியின் செய்யும்போது சூரிய ஒளி உடலின் மீது படுகிறது. இது உடலுக்கு வைட்டமின் டி சத்து கிடைக்க உதவும். இந்த உயிர்ச்சத்தானது எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையானது. அதுமட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் தேவையானது.
Slow Walk Benefits
எங்கு நடக்கலாம்?
வீட்டின் வளாகம், மொட்டை மாடி, வரவேற்பறை, பூங்கா அல்லது அருகில் உள்ள மைதானம் போன்ற இடங்களில் காலை நடைப்பயிற்சி செய்யலாம். இதனால் அந்த நாளை புத்துணர்ச்சியாக தொடங்க முடியும்.