தினமும் எவ்வளவு 'காலடிகள்' நடந்தால் கொழுப்பு ஈஸியா குறையும்? இந்த 'ட்ரிக்' தெரியுமா?
தினமும் எவ்வளவு காலடிகள் நடந்தால் கொழுப்பு குறைந்து எடை கட்டுக்குள் வரும் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

Walking For To Reduce Belly Fat
How Many Steps Should You Walk To Reduce Belly Fat : உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்ய தேவையில்லை. மிதமான உடற்பயிற்சிகள் மூலமும் கொழுப்பை குறைத்து எடையை கட்டுக்குள் கொண்டுவர முடியும். நடைபயிற்சியும் அப்படியான பயிற்சிதான். தினமும் நடப்பதால் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 500 கலோரிகளை எரிக்க முடியும்.
Walking For To Reduce Belly Fat
எவ்வளவு காலடிகள்?
நாள்தோறும் 10 ஆயிரம் அடிகள் நடந்தால் எடையை சுலபமாக குறைக்கலாம். ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி செய்வதை விடவும் எடை இழப்புக்கு நடைபயிற்சி உதவியாக இருக்கும். நடைபயிற்சியுடன் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.
இதையும் படிங்க: தவறான நேரத்தில் 'வாக்கிங்' ஆபத்து!! கோடைகாலத்தில் எப்போது நடக்கனும் தெரியுமா?
Walking For To Reduce Belly Fat
எவ்வளவு கலோரிகள்?
தினமும் நீங்கள் 10 ஆயிரம் காலடிகள் நடந்தால் கிட்டத்தட்ட 500 கலோரிகள் வரை எரிக்க முடியும். வெறும் வயிற்றில் நடப்பது இன்னும் பயனளிக்கும். ஒரு வாரத்தில் 3,500 கலோரிகள் வரை எரிக்க முடியும்.
இதையும் படிங்க: வெறும் '5' நிமிட வாக்கிங் போதும்!! இந்த டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க!!
Walking For To Reduce Belly Fat
நடைபயிற்சி ஏன் சிறந்தது?
நடைபயிற்சி மிதமான தீவிரம் கொண்ட உடற்பயிற்சியாகும். ஜிம் பயிற்சிகளை போல நடந்து முடித்த பின் உடலுக்கு ஓய்வுக்கு அதிக நேரம் தேவையில்லை. நீங்கள் அதிக வேகத்துடன் அதிகமான தூரம் நடக்கும்போது உடலுக்கு ஓய்வு அளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
Walking For To Reduce Belly Fat
நடை மற்றும் எடை பயிற்சி:
நடைபயிற்சியுடன் எடைகளை தூக்கும் பயிற்சிகளையும் செய்யலாம். இதனால் உடலில் உள்ள கொழுப்பு விரைவில் கரையும். நடைபயிற்சிக்கு ரொம்ப நேரம் கூட ஆகாது. ஒரு நாளில் உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் நீங்கள் நடக்கலாம். காலை எழுந்ததும் 10 நிமிடங்கள், சாப்பிட்ட பின் 10 நிமிடங்கள், மதிய உணவுக்கு பின் 15 நிமிடங்கள், மாலையில் சில நிமிடங்கள் என பிரித்து நடக்கலாம். அதிகமாக வெளியே சென்று நடக்க முடியாதவர்கள் இப்படி முறைகளை பின்பற்றலாம்.