MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • வெறும் '5' நிமிட வாக்கிங் போதும்!! இந்த டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க!! 

வெறும் '5' நிமிட வாக்கிங் போதும்!! இந்த டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க!! 

வெறும் 5 நிமிட நடைபயிற்சி எப்படி வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வருகிறது என இந்தப் பதிவில் காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Apr 09 2025, 08:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Why Five Minutes Walking is Important to Health : நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்றால் நம் உடலும், மனமும் புத்துணர்வாக செயல்பட வேண்டும். காலை விழித்ததும் சோம்பல் முறித்துவிட்டு எழுந்து 5 நிமிடங்கள் நடந்தால் விறைப்புடன் இருக்கும் உடல் சற்று தளர்வாகும். பின் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த அந்த நாளை ஆரோக்கியமாகத் தொடங்க சரியான வழியாகும். இந்தப் பதிவில் வெறும் 5 நிமிட நடைபயிற்சியின் நன்மைகளை காணலாம். 

24
5 நிமிட வாக்கிங்;

5 நிமிட வாக்கிங்;

நீங்கள் ஒரே நேரத்தில் 30 முதல் 60 நிமிடங்கள் வரை நடக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை.  ஒவ்வொரு மணி நேரத்திலும் ஐந்து நிமிடங்கள் நடைபயிற்சி செய்தால் கூட உங்களுக்கு பலன்கள் கிடைக்கும். நாள் முழுவதும் அமர்ந்த நிலையில் வேலை செய்பவர்கள், அதிக நேரம் அமர்ந்திருப்பவர்கள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை ஐந்து நிமிடங்கள் நடைபயிற்சி செல்வது அவர்களுடைய ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. 

இதையும் படிங்க:  தினமும் 2200 காலடிகள் கட்டாயம் நடக்கனும்? இந்த காரணம் தெரியுமா? 

34
ஏன் முக்கியம்?

ஏன் முக்கியம்?

நாம் நாள்தோறும் செய்யக்கூடிய சிறிய விஷயம் கூட நம்முடைய உடலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த கூடும் அதனால் உங்களுடைய நாளை ஒவ்வொரு ஒரு மணி நேரத்திலும் ஐந்து நிமிடங்களாவது நடப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் நீங்கள் அலுவலகத்தில் வேலை செய்பவராக இருந்தால் உங்களுடைய மேஜையில் இருந்து எழுந்து நிற்பது அல்லது ஐந்து நிமிடங்களுக்கு படிகளில் ஏறி இறங்குவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது உடலை ஆரோக்கியமாக பேண உதவுகிறது. 

இதையும் படிங்க:  தினமும் '15' நிமிடங்கள்  வாக்கிங்; இப்படி நடந்தா அத்தனை நன்மை இருக்கு!! 

44
5 நிமிட வாக்கிங் நன்மைகள்

5 நிமிட வாக்கிங் நன்மைகள்

இதை செய்வது எளிமையாக தோன்றலாம். ஆனால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் உங்களுடைய உடலை ஏதேனும் ஒரு செயல்பாட்டில் வைப்பது உங்களுடைய ஆயுளை அதிகரிக்க உதவும். உதாரணமாக 8 மணி நேரத்தில் உள்ள ஒவ்வொரு ஒரு மணிநேரத்திலும் நீங்கள் 5 நிமிடம் சுறுசுறுப்பாக நடந்திருந்தால் அந்த நாள் முடியும் போது 40 நிமிடங்கள் நடந்திருப்பீர்கள். இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. ரத்த அழுத்தத்தை குறைக்கும். கெட்ட கொழுப்பு குறையும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
ஆரோக்கிய குறிப்புகள்
நடைப்பயிற்சியின் நன்மைகள்
நடைப்பயிற்சி குறிப்புகள்
5 நிமிட நடைப்பயிற்சியின் நன்மைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hair Fall?: இனி முடி கொட்டவே கொட்டாது.! உங்க கூந்தல் பளபளக்க இந்த விஷயத்தை மட்டும் செஞ்சா போதும்.!
Recommended image2
Summer Heart care இதய நோயாளிகள் கவனத்திற்கு... கோடை வெயிலில் ஒளிந்திருக்கும் 'சைலண்ட்' ஆபத்துக்கள்
Recommended image3
Vijay fitness secret 50-லும் 25-ஆகத் தெரிவது எப்படி? தளபதி விஜய்யின் டயட், வொர்க்அவுட் 'சீக்ரெட்'
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved