- Home
- உடல்நலம்
- Women's Health: பெண்களே.. 20-லேயே 40 மாதிரி தெரியுறீங்களா? உடனடியாக கைவிட வேண்டிய 5 பழக்கங்கள் இதுதான்!
Women's Health: பெண்களே.. 20-லேயே 40 மாதிரி தெரியுறீங்களா? உடனடியாக கைவிட வேண்டிய 5 பழக்கங்கள் இதுதான்!
Women's Health: சில பெண்களுக்கு, வயசுக்கு முன்னாடியே முகத்துல சுருக்கம், சரும பொலிவு குறைஞ்சு வயசான தோற்றம் வந்துடும். எந்த மாதிரி பெண்கள் சீக்கிரமா வயசானவங்க மாதிரி தெரிவாங்கன்னு நிபுணர்கள் சொல்றத இங்க பார்க்கலாம்.

பெண்கள் சீக்கிரம் வயசான தோற்றத்தை அடைய காரணங்கள்
வயசு ஆகுறது இயற்கையான ஒரு விஷயம்தான். ஆனா பெண்கள் சிலருக்கு வயசுக்கு முன்னாடியே சருமத்துல சுருக்கம், சோர்வு, முடி நரைக்கிறது, தெம்பு இல்லாதது மாதிரி வயசான தோற்றம் வந்துடும். இதுக்கு மரபணு மட்டும் காரணம் இல்ல, நம்மளோட அன்றாட வாழ்க்கை முறை, சாப்பாடு, தூக்கம், மன அழுத்தம்னு பல விஷயங்கள் முக்கிய பங்கு வகிக்குதுன்னு நிபுணர்கள் சொல்றாங்க. சில பழக்கங்கள் சீக்கிரமே வயசான தோற்றத்தைக் கொடுத்துடும். அந்த 5 முக்கியமான பழக்கங்கள் என்னன்னு இப்போ பார்க்கலாம்.
எந்நேரமும் டென்ஷனில் வாழும் பெண்கள்
குடும்பப் பொறுப்பு, வேலை டென்ஷன், பணப் பிரச்சனைன்னு சில பெண்கள் எப்பவுமே மன அழுத்தத்துல இருப்பாங்க. இந்த மாதிரி அதிக நாள் நீடிக்கிற ஸ்ட்ரெஸ், உடம்புல கார்டிசோல் (cortisol) ஹார்மோனை அதிகமா சுரக்க வைக்கும். இதனால தூக்கம் கெட்டு, சருமம் பொலிவிழந்து, நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம். அதனாலதான் தியானம், யோகா, வாக்கிங், பிடிச்ச விஷயங்கள்ல கவனம் செலுத்தி மன அழுத்தத்தைக் குறைக்க நிபுணர்கள் சொல்றாங்க.
இதையும் படிங்க:Facts: கரண்ட் கம்பியில் பறவைகளுக்கு ஏன் ஷாக் அடிப்பதில்லை? 99% பேருக்கு தெரியாத ரகசியம்!
தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள்
ஒரு நாளைக்கு 7-9 மணி நேரம் நல்லா தூங்குறது, உடம்புல இருக்க செல்களைப் புதுப்பிக்க ரொம்ப முக்கியம். தூக்கம் சரியா இல்லைன்னா, கண்ணுக்குக் கீழ கருவளையம், முகத்துல சோர்வு, சரும பொலிவு குறைஞ்சு போறது மாதிரி அறிகுறிகள் தெரியும். ரொம்ப நாளா தூக்கமின்மை தொடர்ந்தா, உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம். அதனால தினமும் ஒரே நேரத்துல தூங்கி, தூங்குறதுக்கு முன்னாடி மொபைல் பார்க்குறதைக் குறைச்சுக்கிறது நல்லதுன்னு நிபுணர்கள் சொல்றாங்க.
இதையும் படிங்க: Independence Day: இந்தியாவில் 'இந்த' ஊரில் மட்டும் ஆகஸ்ட் 16 தான் சுதந்திர தினம்! ஏன் தெரியுமா?

