MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • RO Water: RO வாட்டர் குடித்தால் முடி கொட்டுமா? அதிர்ச்சி தரும் மருத்துவ உண்மை.. முழு விவரம்!

RO Water: RO வாட்டர் குடித்தால் முடி கொட்டுமா? அதிர்ச்சி தரும் மருத்துவ உண்மை.. முழு விவரம்!

RO Water:நாம் வீட்டில் பயன்படுத்தும் RO தண்ணீர் குடிப்பதால் முடி கொட்டுமா? RO தண்ணீர் பயன்படுத்தும்போது நாம் செய்யும் தவறுகள் ஆகியவை குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 12 2026, 08:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
RO வாட்டர் குடித்தால் முடி கொட்டுமா?
Image Credit : AI

RO வாட்டர் குடித்தால் முடி கொட்டுமா?

இன்றைய காலக்கட்டத்தில் கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை பெரும்பாலான வீடுகளில் வாட்டர் பில்டர்கள் (RO Water Purifier) ஆக்கிரமித்துவிட்டன. நிலத்தடி நீரில் இருக்கும் அதிகப்படியான உப்பு மற்றும் கழிவுகளை நீக்கி, தண்ணீரைச் சுத்தமாகவும் சுவையாகவும் மாற்றுவதில் RO பில்டர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

ஆனால், RO தண்ணீர் அதிகம் குடித்தால் முடி கொட்டுமோ? என்ற சந்தேகம் சமீபகாலமாக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.இந்தக் கேள்விக்கான உண்மை பின்னணி என்ன? மருத்துவ மற்றும் சுகாதார நிபுணர்கள் கூறுவது என்ன? விரிவாகப் பார்ப்போம்.

இதையும் படிங்க:Washing Machine: லிக்விட் vs பவுடர்: உங்கள் வாஷிங் மெஷினுக்கு எது நல்லது? ஆயுளை கூட்டும் ரகசியம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
RO தண்ணீர் குடிப்பதால் உண்மையிலேயே முடி கொட்டுமா?
Image Credit : Gemini AI

RO தண்ணீர் குடிப்பதால் உண்மையிலேயே முடி கொட்டுமா?

நேரடியாக சொல்ல வேண்டும் என்றல் RO தண்ணீர் குடிப்பதால் மட்டும் முடி கொட்டுவதில்லை.ஆனால், அதில் ஏற்படும் சில ஊட்டச்சத்து மாற்றங்கள் மறைமுகமாகக் காரணமாக அமையலாம்.

அத்தியாவசிய தாதுக்கள் நீக்கப்படுவது

RO சுத்திகரிப்பு முறையானது, தண்ணீரில் உள்ள கெட்ட உப்புகளையும் கழிவுகளையும் நீக்கும் அதே வேளையில், உடலுக்கும் தலைமுடிக்கும் தேவையான கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற இயற்கை தாதுக்களையும் சேர்த்து நீக்கிவிடுகிறது.

பயோட்டின் மற்றும் துத்தநாகக் குறைபாடு

தலைமுடி ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வளர மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் மிக அவசியம். நாம் தினசரி குடிக்கும் தண்ணீரில் இருந்து கிடைக்கும் இந்த அத்தியாவசிய தாதுக்கள் கிடைக்காமல் போகும்போது, உடலின் ஊட்டச்சத்து சமநிலை மாறி, முடி உதிர்தல் பிரச்சனை தீவிரமடைய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: கடல் மீன் vs ஆற்று மீன்: எதில் சத்துக்கள் அதிகம்? உடம்புக்கு எது நல்லது? ஊட்டச்சத்து நிபுணர்கள் விளக்கம்!

Related Articles

Related image1
Purify Water: வீட்டிலேயே குடிநீரை சுத்திகரிக்க 5 எளிய வழிகள்! கரண்ட் தேவையில்லை! காசும் வேண்டாம்!
Related image2
RO Water Purifier: ஃபில்டர் தண்ணி குடிச்சா கிட்னி பாதிக்குமா? டாக்டர்ஸ் சொல்றது என்ன?
35
RO தண்ணீர் தவிர முடி கொட்டுவதற்கு வேறு என்ன காரணம்?
Image Credit : Asianet News

RO தண்ணீர் தவிர முடி கொட்டுவதற்கு வேறு என்ன காரணம்?

RO தண்ணீரைக் குடிப்பதற்குப் பதிலாக, அதே RO தண்ணீரையோ அல்லது சுத்திகரிக்கப்படாத அதிக உப்புத் தண்ணீரையோ தலைக்கு ஊற்றிக் குளிப்பதுதான் முடி கொட்டுவதற்கு மிக முக்கியமான முதல் காரணமாக உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடின நீர் குளிப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகமாக இருந்தால், அது தலைமுடியில் படிந்து மயிர்க்கால்களைப் பலவீனப்படுத்தும்.

அதிகப்படியான வறட்சி: RO நீரால் தலைக்குக் குளிக்கும் போது, அது தலையிலிருக்கும் இயற்கையான எண்ணெய்ப் பசையை நீக்கி, முடியை அதிக வறட்சியாகவும் உடையக்கூடியதாகவும் மாற்றும்.

இதையும் படிங்க:Smart Meter: கரண்ட் பில் அதிகமாக வந்துருச்சா? இனி அந்த கவலை இல்லை.. அரசு சொன்ன குட்நியூஸ்!

45
இந்த பிரச்சனையிலிருந்து தப்பிப்பது எப்படி?
Image Credit : our own

இந்த பிரச்சனையிலிருந்து தப்பிப்பது எப்படி?

பில்டரில் மினரல் கார்ட்ரிட்ஜ் பயன்படுத்துங்கள்

உங்கள் வீட்டு RO பில்டரில் மினரல் கார்ட்ரிட்ஜ் அல்லது டிடிஎஸ் கன்ட்ரோல் வசதி இருக்கிறதா என்று பாருங்கள். இது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் உடலுக்குத் தேவையான நல்ல தாதுக்களை மீண்டும் சேர்க்க உதவும்.

டிடிஎஸ் அளவை சரியாக வையுங்கள்

குடிநீரின் TDS அளவை 150 முதல் 250 PPM வரை பராமரிப்பது உடலுக்கும் முடிக்கும் நல்லது. TDS அளவை 50-க்கும் கீழே மிகக் குறைவாக வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

உணவில் ஊட்டச்சத்தை அதிகரியுங்கள்

நீர இழக்கும் தாதுக்களை உணவின் மூலம் ஈடுகட்டலாம். அதாவது உங்கள் உணவு பட்டியலில் கீரை வகைகள், முட்டை, பாதாம், நெல்லிக்காய் மற்றும் நிலக்கடலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது தலைமுடி வேர்களை வலுவாக்கும்.

குளிக்கும் தண்ணீருக்கு டேப் பில்டர் பயன்படுத்துங்கள்

உப்புத்தன்மை அதிகமுள்ள தண்ணீரில் குளிப்பதைத் தவிர்க்க, குளியலறை குழாய்களில் பொருத்தக்கூடிய ஹார்ட் வாட்டர் பில்டர்களை பயன்படுத்தலாம். இவை தலைமுடி உதிர்வதைப் பெருமளவு கட்டுப்படுத்தும்.

55
தலைமுடி பராமரிப்பு டிப்ஸ்
Image Credit : google

தலைமுடி பராமரிப்பு டிப்ஸ்

வாரம் இருமுறை சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் தேய்த்து தலைக்குக் குளிப்பது, நீரினால் ஏற்படும் வறட்சியிலிருந்து தலைமுடியைப் பாதுகாக்கும். ஒட்டுமொத்தத்தில் RO தண்ணீர் குடிப்பதால் மட்டுமே முடி கொட்டாது. தாதுக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதும், குளிக்கும் தண்ணீரின் உப்புத்தன்மையைக் கட்டுப்படுத்துவதும் உங்கள் தலைமுடியைப் பாதுகாக்கும் சிறந்த வழிகளாகும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
முடி வளர்ச்சி
முடி உதிர்தல் தடுப்பு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Washing Machine: லிக்விட் vs பவுடர்: உங்கள் வாஷிங் மெஷினுக்கு எது நல்லது? ஆயுளை கூட்டும் ரகசியம்!
Recommended image2
கடல் மீன் vs ஆற்று மீன்: எதில் சத்துக்கள் அதிகம்? உடம்புக்கு எது நல்லது? ஊட்டச்சத்து நிபுணர்கள் விளக்கம்!
Recommended image3
Ghee Benefits: தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுங்க... இவ்ளோ நன்மைகள் இருக்கு!
Related Stories
Recommended image1
Purify Water: வீட்டிலேயே குடிநீரை சுத்திகரிக்க 5 எளிய வழிகள்! கரண்ட் தேவையில்லை! காசும் வேண்டாம்!
Recommended image2
RO Water Purifier: ஃபில்டர் தண்ணி குடிச்சா கிட்னி பாதிக்குமா? டாக்டர்ஸ் சொல்றது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved