- Home
- Lifestyle
- Facts: கரண்ட் கம்பியில் பறவைகளுக்கு ஏன் ஷாக் அடிப்பதில்லை? 99% பேருக்கு தெரியாத ரகசியம்!
Facts: கரண்ட் கம்பியில் பறவைகளுக்கு ஏன் ஷாக் அடிப்பதில்லை? 99% பேருக்கு தெரியாத ரகசியம்!
Facts: நூற்றுக்கணக்கான பறவைகள் கரண்ட் கம்பிகளில் அமர்ந்தும் அவற்றுக்கு ஷாக் அடிப்பதில்லை. இது ஏன் நடக்கிறது தெரியுமா? இதற்குப் பின்னால் உள்ள அறிவியலை தெரிந்து கொள்வோம்.

மின்கம்பிகளில் பறவைகளுக்கு ஏன் ஷாக் அடிப்பதில்லை?
நமது ஊர்களில் உள்ள மின்கம்பிகளில் தினமும் காலையிலும், மாலையிலும் நூற்றுக்கணக்கான பறவைகள் அமர்ந்து இருப்பதை நீங்கள் பார்த்து இருக்கலாம். அதை பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருந்திருக்கும். பறவைகளின் அழகை தாண்டி மின்கம்பிகளில் அந்த பறவைகள் அமர்ந்திருந்தும் அவற்றுக்கு ஏன் ஷாக் அடிப்பதில்லை? நமது கை தெரியாமல் சுவிட்ச் பாக்ஸில் பட்டாலே ஷாக் அடிக்கிறது. ஆனால் மிகப்பெரிய மின் அழுத்தம் நிறைந்த மின்கம்பிகளில் அமர்ந்திருக்கும் பறவைகளுக்கு ஏன் ஷாக் அடிப்பதில்லை? இதற்கு பின்னால் பெரிய அறிவியல் உள்ளது.
இதையும் படிங்க: Black Pepper: மிளகு ஒரிஜினலா? கலப்படமா? எளிதாக கண்டுபிடிக்க டம்ளர் தண்ணீர் போதும்! ஈஸி ட்ரிக்!
இயற்பியல் காரணம் இதுதான்
இயற்பியல் விதிகளின்படி, இரண்டு புள்ளிகளுக்கு இடையே மின்னழுத்த வேறுபாடு இருந்தால் மட்டுமே மின்சாரம் பாயும். ஒரு பறவை ஒரே கம்பியில் இரண்டு கால்களையும் வைத்து அமரும்போது, அதன் கால்களுக்கு இடையே எந்த மின்னழுத்த வேறுபாடும் ஏற்படுவதில்லை. இதனால், மின்சாரம் பறவையின் உடல் வழியாகப் பாயாமல், கம்பி வழியாகவே நேராகச் சென்றுவிடுகிறது.
பறவைகளூக்கு ஏன் பாதிப்பு ஏற்படுவதில்லை?
பறவைகளுக்கு ஷாக் அடிக்காததற்கு இன்னொரு காரணம், மின் சுற்று முழுமையடையாமல் இருப்பதுதான். மின்சாரம் பாய, அது அதிக வோல்டேஜில் இருந்து பூஜ்ஜிய வோல்டேஜ் உள்ள பகுதியை நோக்கி ஒரு முழுமையான சுற்றை உருவாக்க வேண்டும். பறவை கம்பியில் மட்டுமே அமர்ந்திருப்பதால், தரை அல்லது வேறு எந்தப் பொருளுடனும் அதற்குத் தொடர்பு இருப்பதில்லை.
இதனால் மின் சுற்று முழுமையடையாததால், பறவைக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதுவே மனிதர்கள் தரையில் நின்றுகொண்டு கம்பியைத் தொட்டால், நம் உடல் ஒரு கடத்தியாக மாறி, மின்சாரம் பூமிக்குள் பாய்ந்து மின் சுற்று முழுமையடைவதால் ஷாக் அடிக்கிறது.
சில சமயங்களில் பறவைகளுக்கும் பாதிப்பு இருக்கும்
சில சமயங்களில் பறவைகளுக்கும் மின்சார அதிர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு பறவை ஒரு கம்பியில் அமர்ந்திருக்கும்போது, அதன் இறக்கை அல்லது உடல் தவறுதலாக அருகிலுள்ள மற்றொரு கம்பியைத் தொட்டால், இரண்டு கம்பிகளுக்கும் இடையே உள்ள அதிக மின்னழுத்த வேறுபாடு காரணமாக, அதன் உடல் வழியாக மின்சாரம் பாய்ந்து ஷாக் அடித்துவிடும். குறிப்பாக, கழுகுகள், கொக்குகள் போன்ற பெரிய பறவைகள், பறக்கும்போது இரண்டு கம்பிகளை ஒரே நேரத்தில் தொட்டுவிடுவதால், மின்சாரம் தாக்கி இறக்கின்றன.
இதையும் படிங்க: RO Water: RO வாட்டர் குடித்தால் முடி கொட்டுமா? அதிர்ச்சி தரும் மருத்துவ உண்மை.. முழு விவரம்!
பறவைகளில், தோல் உடம்பு சக்திவாய்ந்தவை
மின்சாரம் எப்போதும் குறைந்த மின்தடை கொண்ட பாதையிலேயே எளிதாகப் பாயும். மின்சாரக் கம்பிகள் (அலுமினியம்/தாமிரம்) மிகக் குறைந்த மின்தடை உடையவை. ஆனால் பறவையின் தோல் மற்றும் உடல் திசுக்கள் கம்பியை விடப் பல மடங்கு அதிக மின்தடை கொண்டவை. இதனால் மின்சாரம் பறவையின் உடலைத் தவிர்த்து, கம்பியின் வழியே நேராகப் பாய்கிறது.
பறவைகள் இரு கம்பிகளைத் தொடுவது மட்டுமன்றி, ஒரு கம்பியில் அமர்ந்தபடியே மின்கம்பத்தின் உலோகப் பகுதி அல்லது மின்மாற்றியை தொட்டாலும் தரைத் தொடர்பு ஏற்பட்டு ஷாக் அடிக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

