Protein Deficiency: நம்ம உடம்பு செல்களைப் பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சாப்பிட்டதும் வயிறு நிறைஞ்ச மாதிரி உணரவும் புரோட்டீன் ரொம்ப முக்கியம்.

புரோட்டீன்னு சொன்னாலே எல்லாருக்கும் ஜிம், மசில்ஸ் ஏத்துறதுதான் ஞாபகத்துக்கு வரும். ஆனா, மசில்ஸ் வளர்க்குறதைத் தாண்டி, நம்ம உடம்புல புரோட்டீன் பல முக்கியமான வேலைகளைச் செய்யுது. உடம்பு செல்களைப் பாதுகாக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துறது, சாப்பிட்டதுக்கு அப்புறம் வயிறு நிறைஞ்ச உணர்வைக் கொடுக்கிறதுன்னு இதுக்கு நிறைய பங்கு இருக்கு.

அதனால, நாம சாப்பிடுற உணவுல புரோட்டீன் அளவு சரியா இல்லைன்னா, அது நம்ம அன்றாட வாழ்க்கையையே பாதிக்கும். உணவுல புரோட்டீன் குறைவா இருந்தா, அடிக்கடி பசி எடுக்கும், ஸ்வீட்ஸ் சாப்பிடணும்னு ஆசை வரும். உங்க உடம்புல புரோட்டீன் குறைவா இருக்குன்னு காட்டுற 3 அறிகுறிகள் என்னென்னன்னு பார்க்கலாம்.

பாதம் மற்றும் கணுக்காலில் வீக்கம்

உடம்புல புரோட்டீன் அளவு ரொம்ப குறையும்போது, 'அல்புமின்' (albumin) அப்படிங்கிற புரோட்டீனும் குறையும். இது ரத்தத்துல இருக்கிற திரவ சமநிலையை பார்த்துக்க உதவுது. இது குறையுறதால, உடம்புல நீர் கோர்த்துக்க ஆரம்பிக்கும். இதனாலதான் கால் பாதம், கணுக்கால் பகுதிகள்ல வீக்கம் ஏற்படுது.

இனிப்பு மேல அதிக ஆசை

உடம்புக்குத் தேவையான புரோட்டீன் கிடைக்காதப்போ, அது உடனடி எனர்ஜி தரும் உணவுகளைத் தேடும். இதனாலதான் அடிக்கடி ஸ்வீட்ஸ் சாப்பிடணும்னு தோணும். இது புரோட்டீன் குறைபாட்டோட ஒரு முக்கியமான அறிகுறி.

சாப்பிட்ட உடனே பசி

வயிறு நிறைய சாப்பிட்டும், ஒரு மணி நேரத்துல மறுபடியும் பசிக்குதா? அப்போ அது புரோட்டீன் குறைபாடா இருக்கலாம். உடம்புக்குத் தேவையான புரோட்டீன் கிடைக்கிற வரைக்கும், அது பசி சிக்னல்களை அனுப்பிட்டே இருக்கும்.