MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Idli Batter: இட்லி மாவு மிச்சமாயிடுச்சா? தோசைக்கு தண்ணி ஊத்தாதீங்க! இந்த ட்ரிக்ஸ் யூஸ் பண்ணுங்க!

Idli Batter: இட்லி மாவு மிச்சமாயிடுச்சா? தோசைக்கு தண்ணி ஊத்தாதீங்க! இந்த ட்ரிக்ஸ் யூஸ் பண்ணுங்க!

Idli Batter: வீட்ல இட்லிக்கு அரைச்ச மாவு மிச்சம் இருக்கா? மாவு ரொம்ப கெட்டியா, இட்லிக்கு மட்டும்தான் சரிவரும்னு தோணுதா? கவலையே வேண்டாம், அதே மாவுல சூப்பரான, மெல்லிசான, மொறுமொறு தோசை சுலபமா செய்யலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 28 2026, 01:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வீட்டில் இட்லி செய்ய அரைத்த மாவு மீந்துவிட்டதா?
Image Credit : Asianet News

வீட்டில் இட்லி செய்ய அரைத்த மாவு மீந்துவிட்டதா?

வீட்ல இட்லி செய்ய அரைச்ச மாவு மிச்சமாயிடுச்சா? மாவு ரொம்ப கெட்டியா, இட்லிக்கு மட்டும்தான் சரிவரும்னு தோணுதா? அதே மாவுல சுவையான, மெல்லிசான, மொறுமொறுப்பான தோசையை ஈஸியா செய்யலாம். இட்லி மாவை தோசை மாவா மாத்த, சரியான அளவுல தண்ணி சேர்க்கணும். ஆனா, ஒரேடியா தண்ணி ஊத்துனா மாவு ரொம்ப நீர்த்துப் போயிடும். அதனால கொஞ்சம் கொஞ்சமா தண்ணி சேர்க்கிறதுதான் நல்லது.

1 லிட்டர் இட்லி மாவுக்கு எவ்வளவு தண்ணீர்?

சுமார் 1 லிட்டர் இட்லி மாவுக்கு 200 மில்லி, அதாவது கிட்டத்தட்ட ஒரு கப் தண்ணி சேர்த்து நல்லா கலக்கலாம். ஆனா, மாவோட கெட்டித்தன்மையைப் பொறுத்து தண்ணியோட அளவு கொஞ்சம் மாறலாம். மாவு இன்னும் கெட்டியா இருந்தா, தேவைக்கு ஏற்ப இன்னும் கொஞ்சம் தண்ணி சேர்த்துக்கலாம். கரண்டியில எடுக்கும்போது மாவு ஈஸியா வழியிற பதத்துக்கு இருக்கணும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மாவை எப்படி நீர்க்கச் செய்வது?
Image Credit : Asianet News

மாவை எப்படி நீர்க்கச் செய்வது?

முதல்ல, தேவையான அளவு மாவை மட்டும் தனியா எடுங்க. மொத்தமா வெச்சிருக்குற இட்லி மாவு பாத்திரத்துல நேரடியா தண்ணி ஊத்திடாதீங்க. உங்களுக்கு எத்தனை தோசை வேணுமோ, அத்தனைக்கான மாவை மட்டும் ஒரு தனி பாத்திரத்துல எடுத்துக்கோங்க. இதனால மீதி மாவை மறுபடியும் இட்லிக்கு பயன்படுத்தலாம்.

கொஞ்சம் கொஞ்சமா தண்ணி சேருங்க

ஒரே தடவையா தண்ணிய ஊத்தாம, சுமார் ¼ கப் அளவு தண்ணிய கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து நல்லா கலக்குங்க. மாவு மென்மையா, நீர்த்து, கரண்டியில இருந்து சுலபமா வழியிற நிலைக்கு வந்ததும் தண்ணி சேர்க்கிறத நிறுத்திடுங்க.

Related Articles

Related image1
Kitchen Hack: இட்லி மாவு பொங்கி வழியுதா? இந்த ஒரு டம்ளரை வெச்சா போதும், கிச்சன் கிளீன்!
Related image2
kanchipuram temple idli : காஞ்சிபுரம் இட்லி...அதே பாரம்பரிய சுவையில் நம்ம வீட்டில் ஈஸியா எப்படி செய்யலாம்?
35
உப்பை சரிபார்க்கவும்
Image Credit : AI Image

உப்பை சரிபார்க்கவும்

இட்லி மாவுல போட்ட உப்பு, தோசைக்கு பத்தாம இருக்கலாம். அதனால, மாவோட சுவையைப் பார்த்துட்டு, தேவைப்பட்டா இன்னும் கொஞ்சம் உப்பு சேர்த்து நல்லா கலக்குங்க. தோசையோட சுவை சரியா இருக்க, உப்போட அளவும் ரொம்ப முக்கியம்.
45
மொறுமொறுப்பான தோசைக்கான டிப்ஸ்
Image Credit : Chat GPT

மொறுமொறுப்பான தோசைக்கான டிப்ஸ்

உங்க இட்லி மாவு ரொம்ப கெட்டியா இருந்தாலோ அல்லது மாவு பழையதாகிவிட்டாலோ, தோசை எதிர்பார்த்த அளவுக்கு மொறுமொறுப்பா வராது. அந்த மாதிரி நேரத்துல, மாவுல ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து நல்லா கலக்கலாம். இது தோசைக்கு கூடுதல் மொறுமொறுப்பைக் கொடுக்கும். இன்னொரு ஆப்ஷனா, கொஞ்சமா ரவையை ஊறவெச்சு அரைச்சு மாவுல சேர்க்கலாம்.
55
தோசை செய்வதற்கு முன் மாவு பதத்தை சரிபார்க்கவும்
Image Credit : Instagram

தோசை செய்வதற்கு முன் மாவு பதத்தை சரிபார்க்கவும்

தோசைக்கல் சூடானதும், கொஞ்சம் மாவை ஊத்திப் பாருங்க. மாவு கல்லுல சுலபமா பரவணும். மாவு ரொம்ப கெட்டியா இருந்தா தோசை மொத்தமா வரும். ரொம்ப நீர்த்துப் போனா, கல்லுல பரப்ப கஷ்டமா இருக்கும். அதனால, மாவு சுலபமா வழியிற பதத்துல, ஆனா தண்ணி மாதிரி இல்லாம இருக்கணும். இப்படி மிச்சமான இட்லி மாவை வீணாக்காம, அதே மாவுல காலை டிபனுக்கு சுவையான, மொறுமொறுப்பான தோசை செய்யலாம்.

சின்ன டிப்ஸ்: தண்ணியை எப்பவும் கொஞ்சம் கொஞ்சமாதான் சேர்க்கணும். மாவோட பதத்தைப் பார்த்து அளவை சரிசெய்றதுதான் நல்ல ரிசல்ட் கொடுக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
உணவு

Latest Videos
Recommended Stories
Recommended image1
துருப்பிடித்த கத்தரிக்கோல், அழுக்கு ஷூ.. பளபளக்க இந்த டிப்ஸ் போதும்!
Recommended image2
Laundry Tips: டாப் லோடிங் வாஷிங் மெஷினில் துணி போடும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க!
Recommended image3
Washing Machine : வாஷிங் மெஷின்ல இப்படி துணியைப் போடுங்க, அழுக்கு சுத்தமா இருக்காது!
Related Stories
Recommended image1
Kitchen Hack: இட்லி மாவு பொங்கி வழியுதா? இந்த ஒரு டம்ளரை வெச்சா போதும், கிச்சன் கிளீன்!
Recommended image2
kanchipuram temple idli : காஞ்சிபுரம் இட்லி...அதே பாரம்பரிய சுவையில் நம்ம வீட்டில் ஈஸியா எப்படி செய்யலாம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved