Tamil

டைல்ஸ் புதுசு போல ஜொலிக்கட்டும்!

பாத்ரூம் அல்லது கிச்சன் டைல்ஸில் மஞ்சள் கறை படிந்திருந்தால் கவலைப்பட வேண்டாம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அவற்றை எளிதாகச் சுத்தம் செய்யலாம்.

Tamil

பேக்கிங் சோடா மற்றும் வினிகர்

பேக்கிங் சோடா மற்றும் வெள்ளை வினிகரை கலந்து திக்கான பேஸ்ட்டை உருவாக்கவும். இதை கறை மீது தடவி, 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு பிரஷ் கொண்டு தேய்த்தால், கறை மாயமாகிவிடும்!

Image credits: Social Media
Tamil

எலுமிச்சை பழம்

எலுமிச்சைகு இயற்கையாகவே பிளீச்சிங் குணம் உண்டு. பாதி எலுமிச்சையை கறை மீது நேரடியாகத் தேய்க்கலாம் அல்லது அதன் சாற்றைத் தடவலாம். 20 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

Image credits: Getty
Tamil

ஹைட்ரஜன் பெராக்சைடு

கறைகள் மிகவும் பழையதாக இருந்தால், ஹைட்ரஜன் பெராக்சைடு பயன்படுத்தவும். இதை கறையின் மீது ஸ்ப்ரே செய்து 15 நிமிடங்கள் கழித்து, பிரஷ்ஷால் தேய்த்து சுத்தம் செய்யவும்.

Image credits: Getty
Tamil

வினிகர் மற்றும் டிஷ் சோப்

ஸ்ப்ரே பாட்டிலில் சம அளவு தண்ணீர் மற்றும் வினிகரை கலக்கவும். இதில் 1 டீஸ்பூன் பாத்திரம் கழுவும் லிக்விட் சேர்க்கவும். இதை ஸ்ப்ரே செய்து 10 நிமிடங்கள் கழித்து துடைத்து எடுக்கவும்.

Image credits: social media
Tamil

உப்பின் பயன்பாடு

கறை உள்ள இடத்தில் சிறிது தண்ணீர் தெளித்து, அதன் மீது சாதாரண உப்பைத் தூவவும். இரவு முழுவதும் அல்லது குறைந்தபட்சம் 2 மணி நேரம் அப்படியே விட்டு, பின்னர் பிரஷ்ஷால் தேய்த்துக் கழுவவும்.

Image credits: Getty
Tamil

பாதுகாப்பு நினைவில் இருக்கட்டும்

சுத்தம் செய்யும் போது கைகளுக்கு கையுறை (Gloves) அணிவதும், பாத்ரூமில் காற்றோட்டத்திற்காக ஜன்னலைத் திறந்து வைப்பதும் நல்லது.

Image credits: flipkart

Distracted Eating: TV பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? Very Danger!

Ghee Coffee: பிளாக் காபியில் நெய் சேர்ப்பது ஏன் பிரபலமாகிறது?

சாப்பாட்டுல தினமும் கிராம்பு சேர்த்தா இவ்ளோ நன்மைகளா.!

Silver Toe Rings : உங்கள் கால்களின் அழகை ரெட்டிப்பாக்கும் வெள்ளி மெட்டிகள்!