Tamil

பிளாக் காபியில் நெய் கலந்து குடிங்க!

பிளாக் காபியில் சிறிது நெய் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இந்த வெப் ஸ்டோரியில் விரிவாகப் பார்க்கலாம்.

Tamil

நாள் முழுவதும் எனர்ஜி கிடைக்கும்

பிளாக் காபியில் உள்ள காஃபின், ஆற்றலை உடனடியாக அதிகரிக்கிறது. அதே சமயம், நெய்யில் உள்ள கொழுப்பு சீரான ஆற்றலை வெளியிடுகிறது. இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

Image credits: Getty
Tamil

ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

பிளாக் காபியில் உள்ள காஃபின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, வலிகளைக் குறைக்கும். மேலும், நெய்யில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் சில அசௌகரியங்களைக் குறைக்க உதவும்.

Image credits: social media
Tamil

செரிமானப் பிரச்சனைக்கு தீர்வு

நெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை எளிதாக்குகின்றன. நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் செரிமான செயல்முறையைத் தூண்டுகின்றன.

Image credits: social media
Tamil

மனநிலையை மேம்படுத்தும்

நெய் கலந்த காபி, உங்கள் மனநிலையை மேம்படுத்தும். இது பதற்றத்தைக் குறைத்து, மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

Image credits: Getty
Tamil

உடல் எடையைக் கட்டுப்படுத்தும்

காபியில் நெய் சேர்த்து குடிப்பதால், பசி மற்றும் தேவையற்ற தின்பண்டங்கள் சாப்பிடும் ஆசை குறையும். இது மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

Image credits: Getty
Tamil

நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்கும்

நெய்யில் உள்ள பியூட்டிரேட், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை ஆதரிக்கிறது. காபியில் நெய் சேர்ப்பதன் மூலம், ஆரோக்கியமான செரிமான மண்டலத்திற்கு இது உதவுகிறது.

Image credits: Getty

சாப்பாட்டுல தினமும் கிராம்பு சேர்த்தா இவ்ளோ நன்மைகளா.!

Silver Toe Rings : உங்கள் கால்களின் அழகை ரெட்டிப்பாக்கும் வெள்ளி மெட்டிகள்!

Cleaning Tips : வாஷ் பேசின் மஞ்சள் கறையை போக்கி பளிச்னு ஆக்க 4 சூப்பர் டிப்ஸ்!

TV Cleaning : உங்க ஸ்மார்ட் டிவி ஸ்க்ரீனை டேமேஜ் ஆகாம எப்படி சுத்தம் செய்வது?