MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Cooker Cleaning: அடிபிடித்த குக்கர் புதுசு போல ஜொலிக்க சிம்பிள் ட்ரிக்ஸ்.. மணிக்கணக்கில் தேய்க்க வேண்டாம்!

Cooker Cleaning: அடிபிடித்த குக்கர் புதுசு போல ஜொலிக்க சிம்பிள் ட்ரிக்ஸ்.. மணிக்கணக்கில் தேய்க்க வேண்டாம்!

Cooker Cleaning: சமைக்கும்போது குக்கர் அடி பிடிப்பது சகஜம். இந்த கறையை போக்க மணிக்கணக்கில் தேய்க்க வேண்டாம். இந்த ஈஸி டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க, குக்கர் புதுசு போல ஜொலிக்கும்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 14 2026, 05:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அடிபிடித்த குக்கரை புதுசு போல ஜொலிக்க ட்ரிக்ஸ்
Image Credit : AI Image

அடிபிடித்த குக்கரை புதுசு போல ஜொலிக்க ட்ரிக்ஸ்

சமைக்கும்போது கவனக்குறைவால் குக்கர் அடிபிடித்துவிடும். அந்த கறுப்புக் கறைகளை நீக்க மணிக்கணக்கில் தேய்க்க வேண்டாம். வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே குக்கரை புதுசு போல ஜொலிக்க வைக்கலாம்.

முதலில் குக்கரின் விசில், ரப்பரை தனியாக எடுங்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அரை ஸ்பூன் டீத்தூள் சேர்த்து கொதிக்க வையுங்கள். அந்த நீரை வடிகட்டி, அதில் கொஞ்சம் டிஷ் வாஷ் லிக்விட் அல்லது ஷாம்பு, ஒரு பெரிய ஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து கலக்குங்கள். குக்கரை லேசாக சூடு செய்து, அடுப்பை அணைத்துவிட்டு இந்த கலவையை உள்ளே ஊற்றி எல்லா இடங்களிலும் பரவ விடுங்கள். சிறிது நேரம் கழித்து ஸ்க்ரப்பர் வைத்து தேய்த்தால் கறைகள் சுலபமாக வந்துவிடும்.

இதையும் படிங்க: Facts: கரண்ட் கம்பியில் பறவைகளுக்கு ஏன் ஷாக் அடிப்பதில்லை? 99% பேருக்கு தெரியாத ரகசியம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
குக்கரை இப்படி சுத்தம் செய்யுங்கள்
Image Credit : Getty

குக்கரை இப்படி சுத்தம் செய்யுங்கள்

பாதுகாப்புக்காக குக்கர் விசிலையும் சுத்தம் செய்வது முக்கியம். விசிலில் உணவுத் துகள்கள் சிக்கினால், பிரஷர் சரியாக வெளியேறாமல் ஆபத்து ஏற்படலாம். அதனால், சுடுதண்ணீரில் டிஷ் வாஷ் லிக்விட், பேக்கிங் சோடா கலந்து அதில் விசிலை ஊறவைத்து, பழைய டூத் பிரஷ்ஷால் சுத்தம் செய்யுங்கள். இதேபோல ரப்பரையும் சுத்தம் செய்தால், அதில் உள்ள பிசுக்கு, அழுக்கு நீங்கிவிடும்.

கறைகளை நீக்க ரொம்பவும் அழுத்தித் தேய்க்க வேண்டாம். சூடான கிளீனிங் கலவையில் ஊறவைத்தால், கறை மென்மையாகிவிடும். பிறகு ஸ்க்ரப்பர் வைத்து சுலபமாக நீக்கலாம். குக்கரை பயன்படுத்திய உடனே கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். கறை பட்டவுடன் இந்த டிப்ஸை பயன்படுத்தினால், குக்கர் நீண்ட நாள் புதுசு போல இருக்கும்.

இதையும் படிங்க: Boiled Eggs: ஃப்ரிட்ஜில் வச்ச அவிச்ச முட்டை.. எத்தனை நாள் வரை சேஃப்? முட்டை பிரியர்கள் கவனத்திற்கு!

34
துர்நாற்றம் மற்றும் வெளிப்புறக் கறைக்கு எலுமிச்சை சாறு
Image Credit : AI Image

துர்நாற்றம் மற்றும் வெளிப்புறக் கறைக்கு எலுமிச்சை சாறு

குக்கரில் அடிபிடித்த துர்நாற்றம் போகவும், வெளிப்புறத்தில் படிந்துள்ள கறைகளை நீக்கவும் அரை எலுமிச்சை பழத்தில் கல்உப்பு தொட்டு கறை உள்ள இடங்களில் தேய்த்தால் கறை மற்றும் துர்நாற்றம் உடனடியாக மறையும்.

உப்புக்கறைகளுக்கு வெள்ளை வினிகர்

நாம் பயன்படுத்தும் தண்ணீரின் தன்மையால் குக்கரின் உட்புறத்தில் வெள்ளை நிறத்தில் உப்புக்கறைகள் படியும். இதற்கு குக்கரில் சிறிதளவு தண்ணீர் மற்றும் 2 ஸ்பூன் வெள்ளை வினிகர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் வெள்ளைக்கறைகள் முற்றிலும் மறைந்துவிடும்.

இதையும் படிங்க: RO Water: RO வாட்டர் குடித்தால் முடி கொட்டுமா? அதிர்ச்சி தரும் மருத்துவ உண்மை.. முழு விவரம்!

44
ரப்பர் ஆயுளை அதிகரிக்க டிப்ஸ்
Image Credit : AI

ரப்பர் ஆயுளை அதிகரிக்க டிப்ஸ்

ரப்பரைக் கழுவிச் சுத்தம் செய்த பிறகு, அதை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு ஃபிரீசரில் 15-20 நிமிடங்கள் வைத்து எடுத்தால், அதன் நெகிழ்வுத்தன்மை தளர்ந்து போகாமல் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.

அலுமினியம் vs ஸ்டீல் குக்கர் எச்சரிக்கை

உங்களுடையது அலுமினிய குக்கர் என்றால், எஃகு ஸ்க்ரப்பர்களை பயன்படுத்த வேண்டாம்; அது குக்கரில் கோடுகளை உண்டாக்கிவிடும். ஸ்டீல் குக்கராக இருந்தால் மட்டுமே கடினமான ஸ்க்ரப்பர்களைப் பயன்படுத்தலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
சுத்தம் குறிப்புகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Potato Storage Tips: வெங்காயம், உருளை சேர்த்து வைக்கலாமா? அழுகாமல் இருக்க இந்த ரகசியம் தெரிஞ்சுகோங்க
Recommended image2
Vegetarian Chicken 65: சிக்கனே இல்லாமல் சிக்கன் 65..! முழு தட்டையும் காலி பண்ணாம விடமாட்டீங்க!
Recommended image3
வேர்த்து, விறுவிறுக்க தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்கணுமா? உண்மையில் இப்படி நடப்பது அவசியமா?
Related Stories
Recommended image1
Pressure Cooker: அலுமினியம் குக்கர் vs ஸ்டீல் குக்கர்.! சமையலுக்கும், ஆரோக்கியத்திற்கும் எது பெஸ்ட்?
Recommended image2
Cooker Hacks: குக்கர் விசில் அடிக்கும்போது தண்ணீர் கொட்டுதா? இந்த சிம்பிள் ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved