- Home
- உடல்நலம்
- வாழைப்பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பீங்களா? இனி இந்த தவறு செய்யாதீங்க.. ஏன் தெரியுமா?
வாழைப்பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பீங்களா? இனி இந்த தவறு செய்யாதீங்க.. ஏன் தெரியுமா?
வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கலாமா? அப்படி குடித்தால் என்ன ஆகும்? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Drinking Water After Banana
வாழைப்பழம் எல்லோருக்கும் எளிதாக கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்றாகும். இது ஒரு சூப்பர் ஃபுட் ஆகும். மிகவும் குறைந்த விலையில் எந்த பருவத்திலும் கிடைக்கும். வாழைப்பழத்தில் சத்துக்கள் ஏராளமாக உள்ளதால் தினமும் காலை ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வாழைப்பழத்தில் கலோரிகள், புரதங்கள், கொழுப்புகள், மெக்னீசியம், நார்ச்சத்து, காப்பர், கார்போஹைட்ரேட்டுகள், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6 போன்றவை உள்ளன. ஆனால் பெரும்பாலானோர் வாழைப்பழத்தை சாப்பிட்டு பிறகு ஒரு பெரிய தவறு செய்கிறார்கள். அதன் விளைவாக ஆரோக்கியத்திற்கு அதன் நன்மைகள் கிடைப்பதற்கு பதிலாக தீங்கு தான் ஏற்படுகிறது. அது என்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கலாமா?
நம்மில் பலருக்கும் வாழைப்பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் அது நல்லதல்ல. வாழைப்பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் வயிற்றுப் பிரச்சனைகள் அதிகரிக்கும். ஏனெனில் வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால், அது தண்ணீருடன் சேர்ந்து செரிமான பிரச்சனைகளை உருவாக்கும் மற்றும் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். இதன் விளைவாக அசிடிட்டி, வீக்கம், வாயு, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு எப்போது தண்ணீர் குடிக்கணும்?
வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு சுமார் அரை மணி நேரம் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும் அப்போதுதான் வாழைப்பழத்தில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களும் நீங்கள் முழுமையாக பெற முடியும்.
வாழைப்பழம் சாப்பிட சரியான நேரம் எது?
வாழைப்பழத்தை காலை உணவின் போது சாப்பிடலாம். அதுபோல இதை யோகர்ட் போன்ற அதிக கொழுப்பு மற்றும் பொருத்தம் உள்ள உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம் இது உங்களது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
வாழைப்பழம் சாப்பிடுவதன் நன்மைகள் ;
வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் உங்களது மன அழுத்த ஹார்மோனை ஒழுங்குபடுத்தும். இதில் இருக்கும் கல்சியம் எலும்புகளை வலுப்படுத்த உதவும். வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி கண்கள் மற்றும் சருமத்திற்கு நன்மை பயக்கும்.