- Home
- உடல்நலம்
- Banana for Weight Loss : தினமும் ஒரு வாழைப்பழம்; உடல் எடை மளமளவென குறைய எப்படி சாப்பிடணும்?
Banana for Weight Loss : தினமும் ஒரு வாழைப்பழம்; உடல் எடை மளமளவென குறைய எப்படி சாப்பிடணும்?
உடல் எடையை வேகமாக குறைக்க வாழைப்பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

எடை இழப்புக்கு வாழைப்பழம்
உங்களது எடை மற்றும் இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பை குறைக்க நீங்கள் போராடுகிறீர்களா? இதோ உங்களுக்காக இருக்கிறது வாழைப்பழம். ஆம், எடை இழுப்புக்கு வாழைப்பழம் சிறந்த தேர்வு. ஆனால் அதை எப்படி சாப்பிடுவது என்பதுதான் ரொம்பவே முக்கியம். சரி இப்போது உண்மையிலேயே எடை இழப்புக்கு வாழைப்பழம் உதவுமா? அதை எப்படி சாப்பிட வேண்டும்? இதற்கான விளக்கத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எடை இழப்புக்கு வாழைப்பழம் உதவுமா?
உண்மையில், எடை இழப்புக்கு வாழைப்பழத்தை நீங்கள் முயற்சிக்கலாம். ஆனால் மிதமாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்களை மட்டும் சாப்பிட்டால் போதும். இது உங்களது எடைகளுக்கு பயணத்தில் சுறுசுறுப்பாக, முழுமையாக மற்றும் ஆரோக்கியமாக வைக்க உதவும். கூடவே சீரன உணவு சாப்பிடுதல் மற்றும் தினமும் உடற்பயிற்சி செய்தல் ஆகியவற்றையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
எடையை குறைக்க வாழைப்பழத்தை எப்படி சாப்பிடலாம்?
காலை உணவாக :
- நாளின் ஆரம்பத்திற்கு காலை உணவு ரொம்ப ரொம்ப முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. எனவே நாம் எடுத்துக் கொள்ளும் காலை உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த சமயத்தில் நீங்கள் எடையை குறைக்க விரும்பினால், வாழைப்பழத்தை உங்களது காலை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வாழைப்பழத்தில் இருக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஆரோக்கியமான எடை இழப்புக்கு உதவும்.
- வாழைப்பழத்தில் பொட்டாசியம் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இது நீண்ட நேரம் உங்களை முழுமையாக உணர வைக்கும். மேலும் மதிய உணவிற்கு முன் சிற்றுண்டி சாப்பிடுவதை தடுக்க்கும். குறிப்பாக கலோரிகள் உட்கொள்ளலை மிக விரைவாக கட்டுப்படுத்த இது உதவுகிறது.
- ஆனால் வாழைப்பழத்தில் நீங்கள் சிப்ஸ், போண்டா, பஜ்ஜி போன்ற அதிக கலோரிகள் கொண்ட தின்பண்டங்களை சாப்பிடுவதற்கு பதிலாக, தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது தான் நல்லது. இது குறைந்த கலோரிகளுடன் பசியை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான முறையில் எடை குறைக்கவும் உதவுகிறது.
உடற்பயிற்சிக்கு பிறகு வாழைப்பழம் சாப்பிடலாமா?
உடற்பயிற்சி பிறகு உடல் ரொம்பவே சோர்வாக இருக்கும். எனவே ஆற்றலை அதிகரிக்க வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் தசைகளை வலுப்படுத்தவும், உருவாக்கவும் உதவும். மேலும் இதில் கார்போஹைட்ரேட், பொட்டாசியம் நிறைந்துள்ளதால் இவை உங்களுக்கு ஆற்றலை தருவதோடு மட்டுமல்லாமல், பசியையும் தணிக்க உதவும். எனவே ஆரோக்கியமான எடை இழப்பு பயணத்தில் வாழைப்பழம் சிறந்து தேர்வாக இருக்கிறது.