Japanese Walking : வயதானவர்களுக்கு இதுதான் பெஸ்ட்!! ஜப்பான் வாக்கிங் பத்தி தெரியுமா?
ஜப்பானியர்கள் பின்பற்றும் வாக்கிங் முறை உடல் எடை குறைப்பு முதல் பல நன்மைகளை செய்யக் கூடியது.

ஜப்பானியர்கள் பின்பற்றும் வாக்கிங் முறை அதிக கொழுப்பை எரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த ஷின்ஷு பல்கலைக்கழக பேராசிரியர்களால் மேம்படுத்தப்பட்ட "இடைவெளி நடைப்பயிற்சி" (Interval walking) இப்போது பரவலாகப் பேசப்படும் மிதமான பயிற்சியாகும். இது அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்டது.
இதில் வெறுமனே நடப்பதற்கு பதிலாக 3 நிமிடங்கள் விறுவிறுப்பாகவும், பின் 3 நிமிடங்கள் மெதுவாகவும் நடக்க வேண்டும். இப்படி மாறி மாறி நடக்க வேண்டும். இந்த சுழற்சியை திரும்ப திரும்ப 30 நிமிடங்கள் செய்தால் போதும்.
இந்த முறையை அமர்ந்த வாழ்க்கை முறை கொண்டவர்கள், வயதானவர்கள் பின்பற்றினால் மிகவும் நல்லது. கொழுப்பு எரிப்பு, இதய ஆரோக்கியம் இரண்டும் நன்றாக இருக்கும். வளர்சிதை மாற்றம் மேம்படும். நாள் முழுக்க அதிக நேரம் அமர்ந்திருப்பவர்கள் இந்த முறையை காலை, மாலை இரண்டு நேரங்களிலும் பின்பற்றலாம்.
ஷின்ஷு பல்கலைக்கழகத்தில் செய்த ஆய்வில், 5 மாதங்களுக்கு இந்த நடைப்பயிற்சியை செய்தவர்கள் 3 முதல் 5 கிலோ கொழுப்பைக் குறைத்தது தெரியவந்தது. ஒரே வேகத்தில் நடந்தவர்களுக்கு மிகச் சிறிய மாற்றங்கள் தான் ஏற்பட்டுள்ளது. வயதானவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளது.