- Home
- உடல்நலம்
- Pumpkin Seeds: நல்ல தூக்கம் முதல் இதய ஆரோக்கியம் வரை: தினமும் ஊறவைத்த பூசணி விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 நன்மைகள்
Pumpkin Seeds: நல்ல தூக்கம் முதல் இதய ஆரோக்கியம் வரை: தினமும் ஊறவைத்த பூசணி விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 நன்மைகள்
தினமும் 2 ஸ்பூன் ஊறவைத்த பூசணி விதைகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, இதய ஆரோக்கியம், சருமப் பராமரிப்பு, நல்ல தூக்கம், மன ஆரோக்கியம், இரத்த சோகை, எடை இழப்பு மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

ஊறவைத்த பூசணி விதைகளை உண்பதால் கிடைக்கும் நன்மைகள்
பூசணி விதைகள் வைட்டமின்கள், தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து, புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்தது. மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு, பொட்டாசியம் ஆகியவை பூசணி விதைகளில் காணப்படுகின்றன. தினமும் 2 ஸ்பூன் ஊறவைத்த பூசணி விதைகளை உண்பதால் கிடைக்கும் சில நன்மைகளைப் பார்ப்போம்.
நோய் எதிர்ப்பு சக்தி
வைட்டமின் சி, ஈ, துத்தநாகம் நிறைந்த பூசணி விதைகளை தவறாமல் உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இதய ஆரோக்கியம்
மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த பூசணி விதைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
சருமம்
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பூசணி விதைகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
நல்ல தூக்கம்
பூசணி விதைகள் மெலடோனின் உற்பத்தியைத் தூண்டுகிறது, இது தூக்கத்திற்கு உதவுகிறது. எனவே இரவில் பூசணி விதைகளை உட்கொண்டால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
மன ஆரோக்கியம்
ஊறவைத்த பூசணி விதைகள் மன அழுத்தம், பதட்டத்தைக் குறைத்து மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
குடல் ஆரோக்கியம்
நார்ச்சத்து நிறைந்த ஊறவைத்த பூசணி விதைகள் செரிமானத்தை மேம்படுத்தி குடல் ஆரோக்கியத்தைப் பேணுகிறது.
இரத்த சோகை
இரும்புச்சத்து குறைபாட்டைப் போக்கவும், இரத்த சோகையைத் தடுக்கவும், எனர்ஜியை அதிகரிக்கவும் பூசணி விதைகளை உண்ணலாம்.
எடை இழப்பு
பூசணி விதைகளில் கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம், எனவே எடை இழப்புக்கு உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவு
நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த பூசணி விதைகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
மூளை மற்றும் எலும்பு ஆரோக்கியம்
துத்தநாகம், மெக்னீசியம், ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பூசணி விதைகள் மூளைக்கு நல்லது. மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.