White Pumpkin: வெள்ளை பூசணியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? அடடே..இத்தனை நாள் தெரியாம போச்சே...
White Pumpkin: வெள்ளை பூசணியை உணவில் சேர்த்துவருவதன் மூலம் அதிக ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
white-pumpkin
வெள்ளை பூசணியில் அதிகம் ஸிங்க் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் இருப்பதால், ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை பல மடங்கு அதிகரிக்கிறது. மேலும், வைட்டமின்கள் ஏ, பி 6, சி மற்றும் ஈ மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் கீழே அறிந்து கொள்வோம்.
மேலும் படிக்க...கிச்சனில் பல்லி, கரப்பான் பூச்சி தொல்லையா..? இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்...பூச்சிகளை ஓட ஓட விரட்டும்...
வெள்ளை பூசணி உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:
வெள்ளை பூசணியானது மன அழுத்தம், மஞ்சள் காமாலை, செரிமான பிரச்சனை, வயிற்றுப் புண்கள் மற்றும் ஒவ்வாமை ஆகியவற்றை எதிர்க்கும் பண்புகளை கொண்டுள்ளது. எனவே, நமது நலத்திற்கு உடல் ஆரோக்கியத்திற்கும் வெள்ளை பூசணி சிறந்த ஒன்றாகும்.
white-pumpkin
சர்க்கரை நோய்:
வெள்ளைப் பூசணியின் சாறு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. எனவே இது டைப் 2 நீரிழிவு நோயை தடுப்பதில் முக்கிய பயனளிக்கிறது.
கொழுப்பை குறைக்க:
வெள்ளை பூசணிக்காயில் அதிகளவு பைட்டோஸ்டெரால்கள் உள்ளன. உடலில் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க செய்கிறது. இது பல புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. எனவே, உங்கள் வழக்கமான உணவில் வெள்ளை பூசணி சேர்த்துக்கொள்வது புற்றுநோயை எதிர்த்து போராட உதவும்.
white-pumpkin
செரிமான பிரச்சனை:
வெள்ளைப் பூசணிக்காயில் அதிக அளவில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் உள்ளன. மேலும், வெள்ளை பூசணியானது வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை நடுநிலையாக்கி pH அளவை சீராக்குகிறது. இவை செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றன.
white-pumpkin
சிறுநீரக கற்கள்:
வெள்ளைப் பூசணிச் சாறு சிறுநீரைப் பிரிக்கும்தன்மை பெற்றுள்ளது. இது சிறுநீரக கற்களை நீக்க உதவுகிறது. மேலும் வெள்ளைப் பூசணியில் உள்ள அதிக அளவு நீர்ச்சத்து சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்க உதவும் என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. எனவே, தினமும் ஒரு கிளாஸ் வெள்ளை பூசணி ஜூஸ் குடித்து வந்தால், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.