Pumpkin: ஆண்களின் விந்தணு அதிகரிக்க பூசணி விதை பெஸ்ட்...நன்மைகள் ஏராளம் கொண்ட அதிசய விதை!
Pumpkin: ஆண்களில் மலட்டுத்தன்மை மற்றும் விந்தணு குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு பூசணி விதை சிறந்த உணவு பொருளாகும்.
Pumpkin: Lifestyle News, Latest Lifestyle News, Lifestyle News in Tamil, Lifestyle News Tamil, Beauty tips in Tamil, Health Tips in Tamil, Health care in tamil Skin care tips in tamil
இன்றைய மேற்கத்திய கலாசாரத்தில், ஆரோக்கியமற்ற உணவு , உடற்பயிற்சி மற்றும் நல்ல தூக்கம் இல்லாமை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் ஆண்கள் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்கின்றனர். இதனால், இளம் வயதிலேயே சர்க்கரை வியாதி, இதய கோளாறு, விந்தணு குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் வந்து தொல்லை கொடுக்கிறது. எனவே, ஆண்கள் தங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் அக்கறை செலுத்துவதை முதன்மை நோக்கமாக பின்பற்ற வேண்டியது அவசியம்.
அந்த வகையில், பூசணி விதைகளை தினசரி உணவில் உட்கொள்வதால், ஆண்களின் ஆரோக்கியம் மேம்படும். அப்படியாக, பூசணி விதைகள் உட்கொள்வது, உடலுக்கு என்னென்ன நன்மைகளை தரும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
Pumpkin:
ஆண்மையை அதிகரிப்பதில்:
பூசணிக்காய் விதைகள் ஆண்மையை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. பூசணி விதைகளில் அதிகம் ஸிங்க் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் இருப்பதால், ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை பல மடங்கு அதிகரிக்கிறது. எனவே, நீங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த விரும்பினால், பூசணிக்காய் விதைகள் உட்கொள்வது அவசியம்.
Pumpkin:
புரோட்டீன் அதிகரிப்பு:
பூசணி விதைகளில் புரதம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது தசைகளின் உறுதித் தன்மை, இதயத்தின் இயக்கம் , இரத்த நாளங்களின் தளர்வு மற்றும் தடையற்ற குடல் செயல்பாடு போன்ற முக்கியமான உடலியல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. பூசணி விதைகள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஆற்றலுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
Pumpkin:
அழகை பராமரிப்பதற்கு பூசணி விதை:
பூசணி விதைகளில் காணப்படும் ஸிங்க் ஆண்களுக்கு பல வகைகளில் நன்மை சேர்க்கின்றன. இது செல்களைப் புதுப்பித்தல், சருமச் சேதத்தை சரிசெய்து ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றை செய்கிறது. இதனால் நீங்கள் எப்போதும் பளபளப்புடன் இருக்கலாம்.
Pumpkin:
சர்க்கரை நோய்:
பூசணி விதைகளில் ஒமேகா-3 அமிலம் அதிகளவில் உள்ளன. இந்த அமிலம் கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரைநோய் வராமல் தடுக்கும். அதுமட்டுமின்று, தூங்குவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்னர் இந்த விதைகளைச் சாப்பிட்டால், மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகளை சரி செய்து நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.