- Home
- உடல்நலம்
- உணவு
- diet for health: இந்த 6 அற்புத பாரம்பரிய உணவுகள் நவீன டயட்டில் அதிகம் பயன்படுத்த காரணம் தெரியுமா?
diet for health: இந்த 6 அற்புத பாரம்பரிய உணவுகள் நவீன டயட்டில் அதிகம் பயன்படுத்த காரணம் தெரியுமா?
மக்கள் மீண்டும் நம்முடைய பாரம்பரிய உணவுகளுக்கு திரும்ப துவங்கி உள்ளனர். இதில் பலவித உடல் பிரச்சனைகளை சரி செய்யவும், ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் 6 பாரம்பரிய உணவுகளை டயட்டிற்காக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.

சிறுதானியங்கள் (மிளகு, கம்பு, ராகி, திணை, வரகு, சாமை):
ஒரு காலத்தில் ஏழைகளின் உணவாகக் கருதப்பட்ட சிறுதானியங்கள், இன்று ஆரோக்கிய உணவை விரும்புவோரின் முதன்மைத் தேர்வாக மாறியுள்ளன. 'புதிய தங்க தானியங்கள்' என்று அழைக்கப்படும் சிறுதானியங்கள், கோதுமை மற்றும் அரிசியை விட அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டவை. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானத்திற்கு மிகவும் நல்லது, மலச்சிக்கலைத் தடுக்கிறது. மேலும், இவை குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் (Low Glycemic Index) கொண்டிருப்பதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. புரதம், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இதில் ஏராளமாக உள்ளன. கோதுமை மற்றும் அரிசியை மட்டுமே சார்ந்திராமல், சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
நெய்:
ஒரு காலத்தில் கொழுப்பின் ஆதாரமாகப் பார்க்கப்பட்ட நெய், இன்று நல்ல கொழுப்பின் வடிவமாக மீண்டும் நம் சமையலறைகளுக்குள் நுழைந்துள்ளது. இதில், வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்ற கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் ஏ கண்களுக்கும், வைட்டமின் டி எலும்புகளுக்கும், வைட்டமின் ஈ சருமத்திற்கும், வைட்டமின் கே ரத்தம் உறைதலுக்கும் முக்கியம். இது செரிமானத்திற்கு உதவுகிறது, மலச்சிக்கலை நீக்குகிறது, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், எலும்புகளை வலுப்படுத்துகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நெய்யில் உள்ள ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் மூளை வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
தேங்காய் எண்ணெய்:
சமையலில் பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் தேங்காய் எண்ணெய் ஒரு காலத்தில் தவிர்க்கப்பட்டு வந்தது, முக்கியமாக அதில் உள்ள 'சாச்சுரேட்டட் கொழுப்பு' காரணமாக. ஆனால், இப்போது அதன் மகத்துவம் உணரப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேங்காய் எண்ணெயில் உள்ள 'மீடியம் செயின் ட்ரைகிளிசரைட்ஸ்' (MCTs) உடலில் உடனடியாக ஆற்றலாக மாற்றப்பட்டு, சேமிக்கப்படும் கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இது கெட்ட கொழுப்பைக் (LDL) குறைத்து, நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் கிருமி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் தேங்காய் எண்ணெய் மிகவும் நல்லது என்பது அனைவரும் அறிந்ததே.
மஞ்சள்:
மஞ்சள் வெறும் மசாலாப் பொருள் மட்டுமல்ல, அது ஒரு அற்புதமான மருத்துவக் குணங்களைக் கொண்ட ஒரு மூலிகை. மஞ்சளில் உள்ள குர்குமின் (Curcumin) கீல்வாதம், மூட்டு வலி போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. மேலும், இது ஆண்டிஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டிருப்பதால், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி, புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலையும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது. தினமும் பால் அல்லது நீரில் மஞ்சள் சேர்த்து அருந்துவது உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்தவும், பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
வேப்ப இலைகள்:
வேப்ப இலைகள் கசப்பாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். இது ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது, தோல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது மற்றும் கிருமிநாசினியாக செயல்படுகிறது. வேப்ப இலைகள் பருக்கள், அரிப்பு, சிரங்கு போன்ற தோல் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு. நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் வேப்ப இலைகள் உதவுகின்றன. இதன் கிருமி நாசினி மற்றும் பூச்சி விரட்டி பண்புகள், வீட்டில் பூச்சிகள் வராமல் தடுக்கவும் உதவுகின்றன. பாரம்பரிய மருத்துவத்தில் வேப்ப இலைகள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, இப்போது அதன் நன்மைகள் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. வேப்ப எண்ணெய், வேப்ப பவுடர் போன்ற வடிவங்களிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.
துளசி:
துளசி வெறும் ஒரு புனிதமான செடி மட்டுமல்ல, அது ஒரு அற்புமான மருத்துவ செடி. 'மூலிகைகளின் ராணி' என்று அழைக்கப்படும் துளசி, சளி, காய்ச்சல் போன்ற சாதாரண நோய்களில் இருந்து புற்றுநோய் போன்ற பெரிய நோய்கள் வரை பலவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. துளசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, மன அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்துகிறது. இதில் உள்ள ஆண்டிஆக்ஸிடன்ட் பண்புகள் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகின்றன. சுவாசக் கோளாறுகளுக்கு துளசி சிறந்த மருந்தாகும். துளசி இலைகளை சாப்பிடுவது அல்லது துளசி டீ குடிப்பது நுரையீரலை சுத்தப்படுத்தி, ஆஸ்துமா, இருமல் போன்ற பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. தினசரி துளசி இலைகளை உட்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.