சிறு தானிய உணவுகளை பலரும் நாடத் துவங்கி இருந்தாலும் குழந்தைகள் இவற்றை விரும்புவத கிடையாது. ஆனால் வழக்கமாக பொங்கல், கஞ்சி என வைத்துக் கொடுப்பதற்கு பதிலாக வித்தியாசமாக இனிப்பான பாயாசமாக செய்து கொடுத்தால் அனைவருமே நோ சொல்லாமல் சாப்பிட்டு விடுவார்கள்.

பழமையான மற்றும் ஆரோக்கியமான ஒரு சிறந்த உணவுப் பழக்க வழக்கமாக இருந்த சிறுதானிய உணவுகள், மீண்டும் சமையலறையில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இந்த வரிசையில் வரகு (Kodo Millet) சிறந்த தேர்வாகும். வழக்கமான அரிசிப் பாயாசத்திற்கு மாற்றாக, வரகு பால் பாயாசம் ஒரு ஆரோக்கியமான இனிப்பு உணவாக உள்ளது.. நறுமணம், பழங்களின் சுவைஅனைத்தும் கொண்ட பாயாசம் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் : 

வரகு அரிசி (Kodo Millet) -1/2 கப்
பால் (காய்ச்சி ஆறிய பால்) - 2 கப் 
வெல்லம் (பொடித்து வைத்தது) - 1/2 கப் 
 ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
முந்திரி பருப்பு (நெய்யில் வறுத்தது) - 10 
பாதாம் (நறுக்கியது) - 5 
 திராட்சை (Dry Grapes) - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன் 

தயாரிக்கும் முறை : 

- முதலில், வரகை சுத்தமாக கழுவி, 10-15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
- ஒரு பானையில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, ஊற வைத்த வரகை மென்மையாக வேகவிடவும்.
- அது வெந்ததும், அதனை கடைசி கட்டத்தில் மிதமான சூட்டில் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
- வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து, பாயாசத்தில் வடிகட்டி சேர்க்கவும் (அழுக்குகளை நீக்க இது உதவும்).
- அதை நன்கு கலந்து, 5 நிமிடங்கள் மெதுவாக கொதிக்க விடவும்.
- ஏலக்காய் பொடி சேர்த்து நறுமணத்தை அதிகரிக்கலாம்.
- பிறகு, ஒரு சிறிய பானையில் நெய் ஊற்றி, முந்திரி, பாதாம், திராட்சையை பொன்னிறமாக வறுத்து, பாயாசத்தில் சேர்க்கவும்.

ஈரோடு ஸ்பெஷல் பொரிச்ச கூட்டு...சுவையான முறையில் செய்வது எப்படி?

பரிமாறும் முறை :

- சூடாக பரிமாறினால், இது நறுமணமுடன் தனியான சுவையை வழங்கும்.
- தேங்காய் பால் சேர்த்தால், சிறிய மாற்றமாக புதிய சுவை கிடைக்கும்.
- இதனை குளிர வைத்துப் பரிமாறினாலும், ஒரு அழகான கிரீமி சுவையை பெறலாம்.

ஆரோக்கிய நன்மைகள் : 

-- சர்க்கரை மாற்றாக வெல்லம் சேர்ப்பதால் இரும்புச்சத்து அதிகம், உடல் சூட்டை சமநிலைப்படுத்தும்.
- சிறுதானியத்தின் நன்மை முழுவதுமாக கிடைக்கும். 
- நீர்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம், எளிதில் செரிமானம் ஆகும்.
- உடல் சூட்டை தணிக்கும் பால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற இனிப்பு.
- மாதவிடாய் சமநிலைக்கான சிறந்த உணவு . சிறந்த சக்திவாய்ந்த பாயாசம்.

பொதுவாக, பாயாசம் என்றாலே பாசிப்பருப்பு, அரிசி போன்றவற்றால் செய்யும் பழக்கம் தான் உண்டு. ஆனால், ஒரு தனித்துவமான மற்றும் ஆரோக்கியமான மாற்றாக இருக்கும் . வரகு பால் பாயாசம் குழந்தைகளும் விரும்பி சிறுதானியங்களை சாப்பிட வைக்கும் சிறந்த வழியாகும். இதனை திருவிழாக்கள், ஸ்பெஷல் நேரங்களில் செய்து மகிழலாம். இது சுவை, ஆரோக்கியம், பாரம்பரியம் ஆகியவற்றின் அழகான சேர்க்கையாக இருக்கும்.