காலையில் சட்டென 10 நிமிடத்தில் தயாரிக்க ஈஸியான 5 பாரம்பரிய பிரெக்ஃபாஸ்ட் ரெசிபி
காலையில் எழுந்து சமைக்க நேரம் இல்லைன்னு டென்ஷன் ஆகுறீங்களா? கவலையை விடுங்க. சட்டென பிரேக் ஃபாஸ்டும் தயாராகணும், அது ஹெல்தியாகவும் இருக்க வேண்டும் என்றால் இந்த 5 உணவுகளை செய்த பாருங்கள். இனி லேட்டா எழுந்தாலும் கவலையும் இல்லை, டென்ஷனும் இல்லை.

தினை மாவு இன்ஸ்டன்ட் கொழுக்கட்டை :
ஊற வைக்க வேண்டாம், அரைக்க வேண்டாம்! கடையில வாங்குன தினை மாவில் கொஞ்சம் சுடுதண்ணி, துருவின தேங்காய், நாட்டுச்சர்க்கரை சேர்த்து பிசைஞ்சு, இட்லி பாத்திரத்துல 7 நிமிஷம் வச்சா போதும். மாவு பிசையும் போது ஒரு சிட்டிகை ஏலக்காய் தூளோடு, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தீங்கன்னா, தட்டுல வச்சதும் தட்டாம காலி ஆயிரும்!

பாரம்பரிய காராமணி கஞ்சி :
முதல் நாள் நைட்டே வறுத்த காராமணியை சுடுதண்ணீரில் ஊற வச்சுடுங்க. காலையில் குக்கரில் உடைத்த பச்சரிசி அல்லது குருணை அரிசியோடு இந்த காராமணி, பூண்டு, சீரகம் சேர்த்து 3 விசில் விட்டா கஞ்சி ரெடி! இந்த கஞ்சிக்கு சைடு டிஷ்ஷே தேவையில்லை. ரெண்டு சின்ன வெங்காயத்தை தட்டிப் போட்டு, கொஞ்சம் மோர் ஊற்றி குடிச்சா.. நாள் முழுக்க எனர்ஜி தான்!
இன்ஸ்டன்ட் கம்மாஞ்சோறு :
கம்பு மாவை லேசாக வறுத்து, தண்ணீரில் கரைத்து கட்டியில்லாமல் கொதிக்க வையுங்க. 5 நிமிடத்தில் மாவு வெந்து கெட்டியாகிவிடும்.வெந்த கம்பு மாவை ஆற வைத்து, குளிர்ந்த தயிர், பொடியாக நறுக்கிய மாங்காய் இஞ்சி, மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து சாப்பிடுங்கள். வெயிலுக்கு உடம்பு ஜிலுஜிலுன்னு இருக்கும்.
முருங்கைக்கீரை கேழ்வரகு அடை :
கேழ்வரகு மாவுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் ஃப்ரெஷ்ஷான முருங்கைக்கீரை சேர்த்து தண்ணீர் தெளித்து பிசையுங்கள். தோசைக் கல்லிலேயே நேரடியாக தட்டி 2 நிமிடம் மூடி போட்டு எடுத்தால் சூப்பர் அடை தயார். அடையை தட்டும் போது கையில் ஒட்டாமல் இருக்க, வாழை இலை அல்லது ஒரு சுத்தமான ஈரத்துணியில் தட்டி கல்லில் போட்டால் ஹோட்டல் ஸ்டைலில் மெலிதாக வரும்!
பருப்பு இல்லாத அவசர தக்காளி கடையல்:
இந்த 10 நிமிட டிஃபன்களுக்கு தொட்டுக் கொள்ள சைடு டிஷ் வேண்டாமா? குக்கரில் தக்காளி, வரமிளகாய், பூண்டு, கொஞ்சம் புளி சேர்த்து 2 விசில் விடுங்க. ஆறியதும் மிக்சியில் ஒரு சுழற்று சுழற்றி, கடுகு, பெருங்காயம் தாளிச்சா 5 நிமிட சட்னி ரெடி! அரைக்கும் போது வறுத்த வேர்க்கடலை ஒரு கைப்பிடி சேர்த்தீங்கன்னா, ஹோட்டல் காரச்சட்னி தோத்துப்போகும் அளவுக்கு ருசி அள்ளும்!

