MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • பழம் சாப்பிடும் போது இந்த 5 தப்பு பண்றீங்களா? அப்போ உடனே நிறுத்துங்க!

பழம் சாப்பிடும் போது இந்த 5 தப்பு பண்றீங்களா? அப்போ உடனே நிறுத்துங்க!

பழங்கள் உடலுக்கு நல்லது என்றாலும், அதைச் சாப்பிடும் முறை பலருக்குத் தெரிவதில்லை. நாம் செய்யும் சில தவறுகளால், பழங்களின் முழுச் சத்துக்களும் கிடைக்காமல் போவதோடு, தேவையற்ற உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படலாம். எனவே, சரியான முறையில் உண்பது அவசியம்.

1 Min read
Author : Priya Velan
Published : May 15 2026, 01:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஃபிரிட்ஜில் வைத்த பழங்கள் :
Image Credit : Getty

ஃபிரிட்ஜில் வைத்த பழங்கள் :

ஃபிரிட்ஜில் இருந்து எடுத்ததும் சில்லென்று இருக்கும் பழங்களை அப்படியே சாப்பிடுவது ஜீரண நெருப்பை (Digestive Fire) அணைத்துவிடும். இது ரத்த ஓட்டத்தை மெதுவாக்கி, அஜீரணத்தை உண்டாக்கும். பழங்களை வெளியில் எடுத்து வைத்து, அறை வெப்பநிலைக்கு வந்த பின்பே சாப்பிட வேண்டும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
உப்பு, சாட் மசாலா தூவுவது:
Image Credit : Getty

உப்பு, சாட் மசாலா தூவுவது:

வெட்டிய பழங்கள் மீது உப்பு அல்லது சாட் மசாலா தூவும் போது, அது பழத்தில் உள்ள நீர்ச்சத்தை வெளியேற்றி, அதன் ஊட்டச்சத்துக்களை அழித்துவிடும். மேலும், உடலில் சோடியம் அளவை அதிகரிக்கும். பழங்களின் இயற்கையான சுவையை அப்படியே ரசித்து சாப்பிடுங்கள், அதுதான் ஆகச் சிறந்தது!

Related Articles

Related image1
தசை வளர்ச்சியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்: உடல் வலிமை பெற எளிய வழிகள்
Related image2
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க...வெறும் வயிற்றில் இந்த பழங்களை சாப்பிடுங்க
35
இரவு நேர 'புரூட் சாலட்':
Image Credit : Getty

இரவு நேர 'புரூட் சாலட்':

பழங்களில் இயற்கையான சர்க்கரையும், கார்போஹைட்ரேட்டும் அதிகம். இரவில் சாப்பிடும் போது அது தூக்கத்தைக் கெடுப்பதோடு, ஆற்றலாக மாறாமல் கொழுப்பாக உடலில் தங்கிவிடும்.மாலை 4 மணிக்கு மேல் பழங்கள் சாப்பிடுவதைத் தவிர்ப்பது உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

45
தண்ணீரோடு சேர்த்து விழுங்குவது
Image Credit : Getty

தண்ணீரோடு சேர்த்து விழுங்குவது

பழங்களிலேயே 80-90% நீர்ச்சத்து உள்ளது. அதைச் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால், வயிற்றின் pH அளவு மாறி, அசிடிட்டி மற்றும் வயிற்று உப்புசம் ஏற்படும். பழம் சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்போ அல்லது சாப்பிட்ட 30 நிமிடங்களுக்கு பின்போ தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.

55
பழங்களின் கலவை :
Image Credit : Getty

பழங்களின் கலவை :

அசிடிக் பழங்களையும் (ஆரஞ்சு, எலுமிச்சை), இனிப்பு பழங்களையும் (வாழைப்பழம்) ஒன்றாகக் கலந்து சாப்பிடக் கூடாது. இது வயிற்றில் நச்சுக்களை (Toxins) உருவாக்கலாம். ஒரு நேரத்தில் ஒரே ஒரு வகையான பழத்தை மட்டும் சாப்பிடுவது ஜீரண மண்டலத்திற்கு மிகவும் நல்லது.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
பழங்களின் ஆரோக்கிய நன்மைகள்
உணவு சேர்க்கைகள்
ஆரோக்கிய குறிப்புகள்
ஆரோக்கியம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Summer Food Tips: கோடையில் உணவு வீணாகாமல் இருக்க 10 சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
Milk Tips: பால் அடிக்கடி திரிஞ்சு போகுதா? அப்போ இந்த ஒரு பொருளை சேருங்க போதும்!
Recommended image3
30+ பெண்களே உஷார்! உங்கள் எலும்புகளை இரும்பாக்க இதோ சில பாரம்பரிய உணவுகள்
Related Stories
Recommended image1
தசை வளர்ச்சியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்: உடல் வலிமை பெற எளிய வழிகள்
Recommended image2
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க...வெறும் வயிற்றில் இந்த பழங்களை சாப்பிடுங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved