- Home
- உடல்நலம்
- உணவு
- Home remedy for COLD & COUGH: கிச்சனே ஒரு மருந்தகம் தான்... வெறும் 3 பொருட்களில் சளி, இருமலை விரட்டலாம்!
Home remedy for COLD & COUGH: கிச்சனே ஒரு மருந்தகம் தான்... வெறும் 3 பொருட்களில் சளி, இருமலை விரட்டலாம்!
Home remedy for COLD & COUGH: குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி மற்றும் இருமலைக் குறைக்க, பக்கவிளைவுகள் இல்லாத இந்த எளிய கிச்சன் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.

சளி & இருமலுக்கு டிப்ஸ்
பருவநிலை மாற்றம் மற்றும் குளிர்காலங்களில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் பாடாய்ப்படுத்துவது நெஞ்சு சளி மற்றும் விடாத வறட்டு இருமல்தான். இதற்கு மருந்து மாத்திரைகளைத் தேடி ஓடுவதற்கு முன்பு, நம் சமையலறையில் எப்போதும் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டே உடனடி நிவாரணம் பெற முடியும். இந்தப் பாரம்பரிய கைவைத்தியக் குறிப்பு, சளி மற்றும் இருமலுக்கு மிகச்சிறந்த தீர்வாக அமைகிறது.
தேவையான பொருட்கள்
ஒரு சிறிய துண்டு இஞ்சி
சிறிதளவு சுத்தமான தேன்
சிறிது மிளகுத்தூள்
படி 1
முதலில், தோல் நீக்கிச் சுத்தம் செய்த ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, இடிக்கல்லில் போட்டு நன்றாக இடித்துக்கொள்ள வேண்டும். இடிக்கல் இல்லாதவர்கள் மிக்ஸியிலும் போட்டு அரைத்துக்கொள்ளலாம். நன்றாக இடித்த அல்லது அரைத்த இஞ்சியைக் கையால் பிழிந்து, அதிலிருந்து ஜூஸ் மட்டும் தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
படி 2
அடுத்ததாக, நாம் எடுத்து வைத்துள்ள அந்த இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு தேன் சேர்க்க வேண்டும். இஞ்சியின் காரத்தன்மையைக் குறைத்துத் தொண்டைக்கு இதமளிக்கத் தேன் உதவுகிறது. அதோடு, சளியை அறுக்கும் தன்மை கொண்ட மிளகுத்தூளைச் சிறிதளவு தூவி, இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று நன்றாகக் கலக்கும்படி ஒரு கரண்டியால் கலக்க வேண்டும்.
படி 3
இவ்வாறு தயார் செய்யப்பட்ட இந்தக் கலவையை ஒன்றரை டேபிள் ஸ்பூன் அளவுக்கு எடுத்து அருந்தினால், தொண்டையை உறுத்தும் வறட்டு இருமல் மற்றும் நெஞ்சு சளி உடனடியாகக் குறையும். வீட்டிலேயே மிகக் குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய இந்த எளிய வைத்தியம், சளி மற்றும் இருமலிலிருந்து விரைவான நிவாரணம் பெற உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர்/ உடல்நலப் பயிற்சியாளரை அணுகவும்.













