- Home
- உடல்நலம்
- உணவு
- south indian breakfast: தினமும் காலையில் சாப்பிடுவதற்கு ஏற்ற சூப்பரான 7 தென்னிந்திய உணவுகள்
south indian breakfast: தினமும் காலையில் சாப்பிடுவதற்கு ஏற்ற சூப்பரான 7 தென்னிந்திய உணவுகள்
உடல் ஆரோக்கியத்தை காப்பதற்கு காலையில் நாம் சாப்பிடும் உணவு மிகவும் முக்கியமானதாகும். அப்படி நம்முடைய ஆரோக்கியத்தை காப்பதற்கு காலையில் சாப்பிடுவதற்கு ஏற்ற 7 தென்னிந்தியாவின் சிறந்த உணவுகள் எவைகள் என்பதை தெரிந்து கொண்டு, அவற்றை சாப்பிட துவங்கலாம்.

இட்லி மற்றும் சாம்பார்:
அரிசி மற்றும் உளுந்து மாவில் செய்யப்படும் இட்லி, ஆவியில் வேகவைக்கப்படுவதால் மிகக் குறைந்த எண்ணெய் கொண்டது. இது எளிதில் ஜீரணமாகும் கார்போஹைட்ரேட்டுகளையும், உளுந்தில் உள்ள புரதத்தையும் கொண்டுள்ளது. இதற்கு தொட்டுக்கொள்ள சுவையான சாம்பார் மற்றும் தேங்காய் சட்னி ஒரு அற்புதமான கலவையாகும். சாம்பாரில், பருப்பு மற்றும் பல காய்கறிகள் நிறைந்ததால் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அளிக்கிறது. தேங்காய் சட்னி ஆரோக்கியமான கொழுப்புகளையும், நார்ச்சத்துக்களையும் வழங்குகிறது. இது நாள் முழுவதும் தேவையான ஆற்றலை வழங்குகிறது.
பெசரட்டு:
பச்சைப் பயறு எனப்படும் பாசிப்பயறைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது புரதச்சத்து நிறைந்த ஒரு சிறந்த காலை உணவாகும். தோசை போன்ற தோற்றத்தில் இருந்தாலும், இதன் சுவை தனித்துவமானது. பாசிப்பயறில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பொதுவாக, பெசரட்டுவின் உள்ளே ரவா உப்புமாவை வைத்து மடித்துப் பரிமாறுவார்கள். இது கூடுதல் கார்போஹைட்ரேட் மற்றும் சுவையைக் கூட்டுகிறது. காரமான இஞ்சி சட்னியுடன் சாப்பிடும்போது இதன் சுவை மேலும் கூடும். பெசரட்டு, ஆந்திராவில் ஒரு பாரம்பரியமான மற்றும் ஆரோக்கியமான காலை உணவாகப் பார்க்கப்படுகிறது.
பிசி பேளே பாத்:
பிசி பேளே பாத், அரிசி, துவரம் பருப்பு மற்றும் பல காய்கறிகளுடன், சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. இதன் பொருள் 'சூடான பருப்பு சாதம்'. இது ஒரு முழுமையான காலை உணவாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இதில் மாவுச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின்கள், தாதுக்கள் சரிவிகிதத்தில் கலந்துள்ளன. மேலும், இதில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். நெய் மற்றும் மொறுமொறுப்பான காராபூந்தியுடன் இதைச் சாப்பிடுவது வழக்கம், இது சுவையையும் செரிமானத்தையும் கூட்டுகிறது.
புட்டு மற்றும் கடலைக் கறி:
அரிசி மாவு மற்றும் தேங்காய் துருவலைக் கொண்டு, ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கப்படுகிறது. இது மிகவும் மென்மையாகவும், தேங்காயின் நறுமணத்துடனும் இருக்கும். ஆவியில் சமைக்கப்படுவதால் இது மிகவும் ஆரோக்கியமானது. கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்த புட்டு, நீடித்த ஆற்றலை வழங்குகிறது. கருப்பு கொண்டைக்கடலையில் செய்யப்படும் காரமான கடலைக் கறியுடன் புட்டு சாப்பிடுவது ஒரு உன்னதமான அனுபவமாகும். கொண்டைக்கடலை புரதம் மற்றும் நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகும். இது கேரளாவில் அன்றாட வாழ்வில் விரும்பி உண்ணப்படும் ஒரு காலை உணவாகும்.
வெண் பொங்கல் :
பெரும்பாலும் கோயில்களிலும் வீடுகளிலும் செய்யப்படும் ஒரு எளிய மற்றும் சுவையான உணவு வெண் பொங்கல். பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பைக் கொண்டு செய்யப்படும் இது, மிளகு, சீரகம் மற்றும் நெய் சேர்த்துத் தாளிக்கப்படுகிறது. மிளகு மற்றும் சீரகம் செரிமானத்திற்கு உதவுவதோடு, உடலுக்கு சூட்டையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகின்றன. இது ஜீரணிக்க எளிதானது மற்றும் உடலுக்கு இதமளிக்கக் கூடியது. பொங்கலில் உள்ள நெய் ஆரோக்கியமான கொழுப்புகளையும், பாசிப்பயறு புரதத்தையும் வழங்குகிறது. இதற்கு சிறந்த ஜோடி காரமான கத்தரிக்காய் கொத்சு அல்லது புத்துணர்ச்சியூட்டும் தேங்காய் சட்னி.
ரவா இட்லி :
ரவா இட்லி சாதாரண இட்லியைப் போல் மாவை புளிக்கவைக்கத் தேவையில்லாத, உடனடியாக செய்யக்கூடிய ஒரு உணவு வகை ரவா இட்லி. ரவை, தயிர் மற்றும் சில மசாலாப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ரவா இட்லி, மிகவும் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும். இதில் சேர்க்கப்படும் கேரட், கொத்தமல்லி போன்ற காய்கறிகள் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கின்றன. கடுகு, உளுத்தம் பருப்பு, மற்றும் முந்திரி தாளித்துச் சேர்ப்பதால் இதன் மணம் அனைவரையும் கவரும். ரவா இட்லி அவசர காலங்களில் அல்லது இட்லி மாவு இல்லாத போது ஒரு சிறந்த மாற்றாகும். உருளைக்கிழங்கு சாகு அல்லது
ஆப்பம் மற்றும் தேங்காய்ப் பால் :
அரிசி மாவு மற்றும் தேங்காய்ப் பால் கொண்டு செய்யப்படும் ஆப்பம், நடுவில் மென்மையாகவும், ஓரத்தில் மொறுமொறுப்பாகவும் இருக்கும். இதன் தனித்துவமான வடிவம் சமைக்கும் முறையால் ஏற்படுகிறது. ஆப்பம், பசையற்ற உணவாகவும், எளிதில் ஜீரணமாகக்கூடியதாகவும் உள்ளது. இதற்கு இனிப்பான தேங்காய்ப் பால் அல்லது காய்கறிகள் போட்ட ஸ்டூ ஒரு சிறந்த பக்க உணவாகும். தேங்காய்ப் பால் ஆரோக்கியமான கொழுப்புகளையும், இனிப்புச் சுவையையும் வழங்குகிறது.