தெலுங்கானா என்றாலே காரசாரமான உணவுகள் தான் நினைவுக்கு வரும். அதிலும் இங்கு செய்யப்படும் அசைவ உணவு வகைகளை வேறு எங்கும் ருசிக்க முடியாது. தெலுங்கானாவின் ஸ்பெஷலான உணவுகளில் ஒன்று நாட்டுக்கோழி குழம்பு. இதை ஒரு முறை சாப்பிட்டு ருசித்தால் இதன் சுவை மறக்க முடியாது ஆகி விடும். 

நாட்டு கோழி குழம்பு என்றாலே அதன் காரசாரமான சுவை, மணக்கும் நறுமணப் பொருட்கள், மென்மையாக வேக வைக்கும் முறை எல்லாம் மொத்தமாக நினைவுக்கு வரும். தெலுங்கானா ஸ்பெஷல் நாட்டு கோழி குரா என்பது அங்குள்ள பாரம்பரிய மசாலா கலவைகளால் தனித்துவம் பெற்ற ஒரு சிறப்பு உணவு. இந்த நாட்டு கோழி குரா, திருவிழாக்கள், பண்டிகைகள், விருந்துகளில் அசைவ பிரியர்களுக்கு விருப்பமான உணவாக இருக்கிறது. மிளகு, மல்லி, புதினா, ஏலக்காய், தேங்காய், மற்றும் மசாலாக்கள் சேர்த்துத் தயாரிக்கப்படும் இந்த சுவையான குழம்பு, சாதம், ரொட்டி, சப்பாத்தி, ராகி சங்கட்டி போன்ற உணவுகளுடன் அருமையாக இருக்கும்.

நாட்டு கோழி குரா செய்ய தேவையான பொருட்கள் :

நாட்டு கோழி – 1/2 கிலோ (சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டியது)
சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3
தேங்காய் விழுது – 1/4 கப்
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

லிப்டிற்கு பதில் தினமும் படிக்கட்டுக்களை பயன்படுத்தினால் இத்தனை நன்மைகளா?

மசாலா பொடி தயாரிக்க வேண்டிய பொருட்கள்:

மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
சுக்கு (உலர்ந்த இஞ்சி) – சிறிய துண்டு
ஏலக்காய் – 2
பெருஞ்சீரகம் – 1/2 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 3
புதினா மற்றும் கொத்தமல்லி இலை – சிறிதளவு
இவைகளை ஒன்றாக வறுத்து, பொடியாக அரைத்துக்கொள்ளவும். இதுவே தெலுங்கு ஸ்டைல் நாட்டு கோழி குரா மசாலா.

செய்முறை :

- நாட்டு கோழியை அரைத்த மசாலா பொடி, உப்பு, சிறிது மஞ்சள் தூள், மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும்.
இது கோழிக்குள் மசாலா நுழைந்து நன்றாக மென்மையாக வேக உதவும்.
- ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக ஆனதும், மசாலா கலந்து ஊற வைத்த நாட்டு கோழி துண்டுகளை சேர்த்து 10 நிமிடங்கள் வதக்கவும்.
- கோழி சற்று வதங்கியதும், தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மூடி 30-40 நிமிடங்கள் மெதுவாக வேகவிடவும்.
- மிதமான தீயில் மிதமாக கொதிக்க விட, இறுதியாக புதினா, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

நாட்டு கோழி குராவின் சிறப்புகள் :

- இதில் உள்ள சிறப்பு மசாலா பொடி, கோழிக்காகவே தயாரிக்கப்பட்டது.
- நாட்டு மசாலாக்கள் சேர்த்து பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுவதால் சுவையும் மணமும் நெஞ்சில் நிற்கும்.
- தெலுங்கு ஸ்டைல் உணவுகளின் தனித்துவம். தெளிவான குழம்பு மற்றும் காரசாரமான வறுவல் கலவையாக இருக்கும்.
- நாட்டு கோழியின் அசல் சுவையை மிக சிறப்பாக அளிக்கும்.

தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

சிறந்த பரிமாறும் முறைகள் :

* சாதத்துடன் – வெறும் சாதத்தில் கொஞ்சம் நெய் ஊற்றி இதை ஊற்றி சாப்பிட்டால் நாக்கில் எச்சில் ஊற வைக்கும் சுவையாக இருக்கும்.
* ராகி சங்கட்டி உடன் – தெலுங்கு உணவுகளுக்கு பொருத்தமான விருந்துணவு.
* பரோட்டா அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அப்படி ஒரு சுவை அள்ளும்.
* தொட்டுக்கொள்ள ஒரு சிறிய வெங்காய சாலட் இருந்தால் சுவையை மேலும் உயர்த்தும்!

பண்டிகை நாட்களில், முக்கிய நிகழ்வுகளில், அல்லது சிறப்பு விருந்துகளுக்கு, இந்த தெலுங்கானா ஸ்பெஷல் நாட்டு கோழி குரா ஒரு மிரட்டலான உணவாக இருக்கும். காரசாரமான சுவை, தனித்துவமான மசாலா, மென்மையான கோழி என்பதால் இது ஒரு முறை சாப்பிட்டால் மறக்க முடியாத உணவாக இருக்கும்.