Banana Vs Dates: எனர்ஜியை வாரி வழங்குவதில் மல்லுக்கட்டும் பழங்கள் - எது சிறந்தது?
வாழைப்பழமும் பேரீச்சம்பழமும் சத்துக்கள் நிறைந்தவை. ஆனால் உங்கள் தேவைக்கு எது சிறந்தது? இரண்டின் நன்மைகள், தீமைகள் மற்றும் யார் எச்சரிக்கையுடன் சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Benefits of Banana
வாழைப்பழமும் பேரீச்சம்பழமும் நம் அன்றாட உணவில் இடம்பெறும் சத்துள்ள பழங்கள். இரண்டிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளன. ஆனால் எது உடலுக்கு அதிக நன்மை பயக்கும் என்பது பலரின் கேள்வி. இரண்டு பழங்களுக்கும் தனித்தனி நன்மைகள் உண்டு. உங்கள் உடல்நிலை மற்றும் தேவைக்கேற்ப எதை சாப்பிட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். எனர்ஜி தேவை, உடல் எடை கூட்ட வேண்டும், தசை வலிமை வேண்டுமென்றால் வாழைப்பழம் சிறந்தது. இரத்த சோகை, எலும்பு பலம், நீண்ட நேரம் உற்சாகமாக இருக்க வேண்டுமென்றால் பேரீச்சம்பழம் சிறந்தது.
Benefits of Dates
பேரீச்சம்பழ நன்மைகள்
இரும்புச்சத்து:
இரத்த சோகை உள்ளவர்களுக்கு பேரீச்சம்பழம் சிறந்தது.
எலும்பு பலம்:
கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் எலும்புகளை வலுவாக்கும்.
உடனடி எனர்ஜி:
குளுக்கோஸ், பிரக்டோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் உடனடி எனர்ஜி தரும்.
இதய ஆரோக்கியம்:
பொட்டாசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய நோய்களை தடுக்கும்.
தோல் மற்றும் கூந்தல் பராமரிப்பு:
பேரீச்சம்பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தோல் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
Dates
பேரீச்சம்பழ தீமைகள்
- சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
- அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை கூடும்.
- சூடான பழம் என்பதால் அதிகமாக சாப்பிட்டால் வாய்ப்புண், மூக்கில் இரத்தம் வடிதல் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
யார் பேரீச்சம்பழம் சாப்பிடக்கூடாது?
- சர்க்கரை நோயாளிகள்
- உடல் சூடு உள்ளவர்கள்
- அசிடிட்டி, மூக்கில் இரத்தம் வடிதல், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள்
Banana
வாழைப்பழ நன்மைகள்
உடனடி எனர்ஜி:
உடற்பயிற்சிக்கு முன் அல்லது காலை உணவாக வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது.
சீரான செரிமானம்:
நார்ச்சத்து மலச்சிக்கலை போக்கும்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்:
பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும்.
உடல் எடை கூட்ட:
வாழைப்பழம் மற்றும் பால் உடல் எடையை அதிகரிக்க உதவும்.
தசை வலிமை:
உடற்பயிற்சிக்கு பின் தசை வலியை குறைக்கும்.
Banana
வாழைப்பழ தீமைகள்
- சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவில் சாப்பிட வேண்டும்.
- அதிகம் பழுத்த வாழைப்பழம் வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
- குளிர்ச்சியான பழம் என்பதால் குளிர்காலத்தில் அதிகமாக சாப்பிடக்கூடாது.
யார் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது?
- சர்க்கரை நோயாளிகள் (குறைந்த அளவு)
- அசிடிட்டி, வயிறு உப்புசம் பிரச்சனை உள்ளவர்கள்
- குளிர்காலத்தில் சளி, காய்ச்சல் உள்ளவர்கள்