- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- அடிக்கிற வெயிலில் கை கருப்பாகிடுச்சா? இந்த '1' பொருள் போதும்.. உடனடி தீர்வு
அடிக்கிற வெயிலில் கை கருப்பாகிடுச்சா? இந்த '1' பொருள் போதும்.. உடனடி தீர்வு
கோடை வெயிலால் உங்களது கைகளில் ஏற்பட்ட கருமையை நீக்க உதவும் சில எளிய வீட்டு குறிப்புகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

கருத்துப்போனே கைகளை வெள்ளையாக மாற்றுவது எப்படி?
கோடைகாலத்தில் கொளுத்தும் வெயிலால் அதிகப்படியான வியர்வை தவிர நான் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை என்னவென்றால் சன் டேன் தான். அழகை பாதுகாக்கும் அனைவருக்கும் இந்த பிரச்சனை பெரிய தலைவலி. அதுவும் குறிப்பாக முகம் வெள்ளையாகவும் பளபளப்பாக இருந்தாலும் கூட கை மட்டும் பலருக்கு சம்பந்தமே இல்லாமல் கருப்பாக இருக்கும். ஆடை மறைந்திருக்கும் பகுதிகளை தவிர கையில் மற்ற இடங்களில் வெயில் படுவதால் சருமம் கருப்பாக மாறுகின்றது. முகத்திற்கு கிரீன் போன்ற எதையாவது பயன்படுத்தி எப்படியாவது அடிக்கும் வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்கிறோம். அதே மாதிரி கொஞ்சம் கைகளையும் கவனித்தால் சூரிய ஒளியால் கருத்துப்போன உங்களது கைகளை வெள்ளையாக மாற்றி விடலாம். அதற்காக சிலர் வீட்டு குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பது குறித்து இப்போது இந்த பதிவில் காணலாம்.
உருளைக்கிழங்கு சாறு:
அடிக்கும் வெயிலால் நிறம் மாறிய உங்களது கைகளை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர உருளைக்கிழங்கு சாறு உதவும். இதற்கு உருளைக்கிழங்கை தூவி அதிலிருந்து சாற்றை மற்றும் பிழிந்து எடுத்து கைகளில் தடவி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு சுத்தமான நீரில் கழுவி பின் மாய்ஸ்சரைசர் தடவி வேண்டும். தினமும் இரவு தூங்கும் முன் இப்படி செய்ய வேண்டும். இந்த முறையை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தாலே கையில் உள்ள கருமை விரைவில் நீங்கிவிடும்.
தக்காளி சாறு மற்றும் தயிர் :
இதற்கு ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் தக்காளி சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து அதை கருத்து போன உங்களது கைகளில் தடவி இரண்டு நிமிடங்கள் ஸ்கிரிப் செய்து சுமார் 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும். அடுத்து கைகளை நன்கு துடித்து மாய்ஸ்சரைசர் தடவுங்கள். இந்த வீட்டு வைத்தியத்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் போதும்.
வெள்ளரிக்காய் மற்றும் ரோஸ் வாட்டர் :
இதற்கு வெள்ளரிக்காயை தூவி அதிலிருந்து சாற்றை எடுத்து அதனுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து கருத்து போன உங்களது கைகளில் தடவி 10 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் கையில் இருக்கும் கருமை கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.
கற்றாழை ஜெல் மற்றும் முல்தானி மெட்டி :
ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து அதை உங்களது கருத்து போன கைகளில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு கழுவ வேண்டும். இந்த வீட்டு வைத்தியத்தை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால் விரைவில் நல்ல மாற்றம் காண்பீர்கள்.
கடலை மாவு மற்றும் மஞ்சள் பொடி :
இதற்கு ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் கடலை மாவு சிறிதளவு மஞ்சள் பொடி மற்றும் தேவையான அளவு பச்சை பல் சேர்த்து நன்கு கலந்து அதை வெயிலில் கருத்து போன உங்களது கைகளில் தடவி மசாஜ் செய்து 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும். கைகளை துடைத்த பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்த மறக்காதீர்கள். இந்த குறிப்பை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால் விரைவில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.