அக்குள் கருமையால கஷ்டப்படுறீங்களா? ஸ்லீவ்லெஸ் போட தயக்கமா இருக்கா? கவலைப்படாதீங்க! உங்க வீட்டுல இருக்கும் ஒரு சில எளிய பொருட்களை வைத்தே இதை சரி பண்ணலாம். இயற்கையான முறை என்பதால் எந்த பக்க விளைவுகள், பாதிப்புகள் ஏற்படாது. மிகவும் பாதுகாப்பானதாகும்.

அக்குள் கருமை ஒரு பொதுவான பிரச்சனை. இது நிறைய பெண்களுக்கு சங்கடத்தை கொடுக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது. அக்குள் கருமைக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். ஷேவிங் செய்வது, அதிக வியர்வை, டியோடரண்ட்ஸ் உபயோகிப்பது மற்றும் இறந்த செல்கள் சேருவது போன்றவை காரணங்களாக இருக்கலாம். உடல் பருமனும் கூட இதற்கு மிக முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது. இதனாலேயே நிறைய பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிய தயங்குவதுண்டு.

சில பெண்கள் இதை சரி செய்ய நிறைய காசு செலவழித்து பியூட்டி பார்லர் போவது உண்டு. ஆனால் காசு செலவழிக்காமலே வீட்டில் இருக்கும் சில இயற்கை பொருட்களை வைத்தே இதை சரி பண்ணலாம். நம்முடைய வீட்டில் தினசரி பயன்படுத்தும் சில எளிய பொருட்களை வைத்துள் அக்குள் கருமையை எப்படி சரி பண்ணலாம்னு பார்க்கலாம். இந்த இயற்கை பொருட்கள் உங்க வீட்லயே ஈஸியா கிடைக்கும். இது அக்குள் கருமையை மட்டும் போக்காமல் சருமத்தை மென்மையாக்கவும் உதவும்.

அக்குள் கருமை ஏற்படுவதற்கு பல காரணங்கள் :

ஷேவிங் செய்வதால் சருமம் எரிச்சல் அடையலாம். இதனால் கருமை ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிகப்படியான வியர்வை காரணமாக அக்குள் பகுதியில் பாக்டீரியாக்கள் வளர ஆரம்பிக்கும். இதுவும் கருமைக்கு ஒரு காரணம்.

சில டியோடரண்ட்களில் உள்ள கெமிக்கல்கள் சருமத்திற்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். 

சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அக்குள் பகுதியில் சேர்வதால் கருமை ஏற்படும்.

அக்குள் கருமையை போக்க சில எளிய வழிகள் :

உருளைக்கிழங்கு சாறு:

உருளைக்கிழங்கு சாறு அக்குள் கருமையை போக்க ரொம்ப உதவும். உருளைக்கிழங்கில் இயற்கையான ப்ளீச்சிங் தன்மை இருக்கு. உருளைக்கிழங்கில் கேட்டகோலேஸ் என்ற என்சைம் இருக்கு. இது சருமத்தில் இருக்கும் கருமையை குறைக்க உதவும். அக்குள் கருமை மட்டுமின்றி கழுத்தில் இருக்கும் கருமையை போக்கவும் இது உதவும். உருளைக்கிழங்கை துருவி சாறு எடுத்து, அதை அக்குள் பகுதியில் தடவி, 15-20 நிமிடங்கள் நன்கு உலற விட வேண்டும். காய்ந்த பிறகு வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்துல 2-3 செய்தாலே நல்ல தீர்வு கிடைக்கும்.

கற்றாழை ஜெல்:

கற்றாழை ஜெல், அக்குள் கருமையை போக்க ரொம்ப நல்லது. அதில் ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும். ஒரு கற்றாழை இலையில இருந்து சதை பகுதியை எடுங்க. அதை அக்குளில் தடவலாம். நேரடியாக அப்படியே தடவலாம். அல்லது மிக்சியில் அடித்து ஜெல் போல செய்து அதையும் தடவலாம். 20 நிமிடம் கழித்து மெதுவாக மசாஜ் செய்து, பிறகு தண்ணீரில் கழுவி விடலாம். இந்த முறையை தினமும் செய்யலாம். இதனால் அக்குள் கருமை மட்டுமின்றி அக்குள் துர்நாற்றமும், அதிகமான வியர்வை துர்நாற்ற பிரச்சனையும் நீங்கும்.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தை வெண்மையாக்க உதவுகிறது. ஆனால், எலுமிச்சை சாற்றை நேரடியாக பயன்படுத்தினால் சருமம் எரிச்சல் அடைய வாய்ப்புள்ளது. எனவே, அதை தண்ணீரில் கலந்து பயன்படுத்தவும். எலுமிச்சை சாறுடன் சிறிதளவு தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து அக்குள் பகுதியில் லேசாக ஸ்கிரப் செய்து, பிறகு தண்ணீரில் கழுவலாம்.

பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடா சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது. ஒரு டீஸ்பூன் அளவிலான பேக்கிங் சோடாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கவும். இந்த கலவையை அக்குள் பகுதியில் தடவி, 2-3 நிமிடங்கள் லேசாக மசாஜ் செய்யவும். பிறகு 10 நிமிடங்கள் உலற விட்டு, தண்ணீரில் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்யலாம்.

வெள்ளரிக்காய் சாறு:

வெள்ளரிக்காய் சாறு சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. மேலும் கருமையை நீக்கவும் உதவுகிறது. வெள்ளரிக்காய் சாற்றில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால் இது அக்குள் கருமையை போக்க மிகச் சிறந்த நிவாரணமாக கருதப்படுகிறது. வெள்ளரிக்காயை அரைத்து சாறு எடுத்து, அதை அக்குள் பகுதியில் தடவி, சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.