சீனு ராமசாமி செய்த டார்ச்சர்! திரையுலகை விட்டே ஓடி போன இளம் நடிகை யார் தெரியுமா? பகீர் கிளப்பிய பத்திரிகையாளர்
பிரபல இயக்குனர் சீனு ராமசாமி, இளம் நடிகை ஒருவருக்கு கொடுத்த டார்ச்சரால் தான் அவர் திரையுலகை விட்டு சில காலம் ஒதுக்கி இருந்தார் என, பிரபல பத்திரிக்கையாளர் கூறியுள்ள தகவல் திரையுலகத்தில் புதிய புயலை கிளப்பியுள்ளது.
திரை உலகில் அறிமுகமாகும் அனைத்து இயக்குனர்களுமே எடுத்த எடுப்பில் பிரபலம் ஆகி விடுவதில்லை. அதே நேரம், லோகேஷ் கனகராஜ், எச்.வினோத், கார்த்திக் சுப்புராஜ், அட்லீ போன்ற இயக்குனர்கள் முன்னணி இடத்தில் இருந்தாலும், உன்னதமான மற்றும் உணர்வுபூர்வமான கதைகளை இயக்கும் இயக்குனர்களுக்கு என, ரசிகர்கள் மத்தியில் தனி இடம் உள்ளது.
அந்த வகையில் கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பின்னர் விஜய் சேதுபதியை வைத்து தென்மேற்கு பருவக்காற்று, படத்தை இயக்கி தேசிய விருதை பெற்றவர் இயக்குனர் சீனு ராமசாமி. மேலும் இவர் இயக்கிய நீர்பறவை, தர்மதுரை, மாமனிதன், போன்ற படங்கள் சிறந்த கதைக்களமாக மட்டும் இல்லாமல், ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாகும்.
தற்போது இயக்குனர் சீனு ராமசாமி குறித்து, பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழில் 'ஆதலால் காதல் செய்வீர்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். இவர் திரை உலகில் இருந்து, சில காலம் ஒதுங்கி இருந்ததன் காரணம், சீனு ராமசாமி செய்த டார்ச்சர் தான் என பத்திரியாகையாளர் பிஸ்மி அதிரடியாக கூறியுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி பல வருடங்களாக வெளியாகாமல் உள்ள திரைப்படம் 'இடம் பொருள் ஏவல்' இந்த படத்தில் மனிஷா யாதவ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பின் போது மனுஷா யாதவுக்கு, சீனு ராமசாமி தொடர்ந்து கொடுத்த டார்ச்சர் சொல்லி மாளாது என்று பிஸ்மி கூறியுள்ளார். மேலும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளது மற்றொரு ஷாக்கிங் தகவல் என கூறலாம்.